நீங்கள்தான் அனுமதி அளித்தீர்கள்.! ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச் சூடு - இந்திய கப்பலில் இருந்து வந்த அவசர ஒலி

India Iran Middle East Strait of Hormuz
By Shadhu Shanker Apr 19, 2026 09:24 AM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது, இந்தியக் கொடியேற்றிய எண்ணெய் கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட அவசர ஒலி (distress audio) தற்போது வெளியாகியுள்ளது.

நேற்று(18) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், ஈரான் கடற்படை குண்டுவீச்சு படகுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியக் கொடியேற்றிய இரண்டு எண்ணெய் கப்பல்கள் திரும்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: தயார் நிலையில் படைகள் - ஈரானின் உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை

உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: தயார் நிலையில் படைகள் - ஈரானின் உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை

அவசர ஒலி 

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், கப்பல்களுக்கு சேதம் ஏதும் இல்லை என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன.

 ‘Sanmar Herald’ என்ற மூல எண்ணெய் கப்பலில் இருந்த பணியாளர் ஒருவர், சுமார் 30 விநாடிகள் நீளமான ஒலி பதிவில் ஈரான் கடற்படையுடன் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.

நீங்கள்தான் அனுமதி அளித்தீர்கள்.! ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச் சூடு - இந்திய கப்பலில் இருந்து வந்த அவசர ஒலி | Indian Ship During Hormuz Firing

அதில், “Sepah Navy… Sepah Navy… இது மோட்டார் டேங்கர் Sanmar Herald. நீங்கள் எனக்கு செல்ல அனுமதி அளித்தீர்கள். உங்கள் பட்டியலில் நான் இரண்டாவது. இப்போது நீங்கள் துப்பாக்கிச் சூடு நடத்துகிறீர்கள். தயவு செய்து திரும்ப அனுமதியுங்கள்” என அவர் பதற்றத்துடன் கூறுவது கேட்கப்படுகிறது.

இந்த ஒலி பதிவு, கடல் போக்குவரத்தை கண்காணிக்கும் ‘Tanker Trackers’ என்ற நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்கா! திருப்பி அனுப்பப்பட்ட 23 கப்பல்கள்

ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள அமெரிக்கா! திருப்பி அனுப்பப்பட்ட 23 கப்பல்கள்

துப்பாக்கிச் சூடு

 அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனம் NBC வெளியிட்ட காட்சிகளின் அடிப்படையில், குறித்த கப்பல் ஹோர்முஸ் நீரிணையின் ‘Green Area’ பகுதியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள்தான் அனுமதி அளித்தீர்கள்.! ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச் சூடு - இந்திய கப்பலில் இருந்து வந்த அவசர ஒலி | Indian Ship During Hormuz Firing

கப்பல் கிழக்குத் திசை நோக்கிச் சென்றபோது தன்னியக்க அடையாள அமைப்பை (AIS) அணைத்திருந்ததுடன், பின்னர் மீண்டும் இயக்கியதாக கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட மற்றொரு கப்பல் ‘Jag Arnav’ என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பலொன்றை அதிரடியாக தாக்கிய IRGC

ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பலொன்றை அதிரடியாக தாக்கிய IRGC

ஆழ்ந்த கவலை

 இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா ஈரான் தூதரை அழைத்து தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.

வணிகக் கப்பல்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதை இந்திய வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது.

நீங்கள்தான் அனுமதி அளித்தீர்கள்.! ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச் சூடு - இந்திய கப்பலில் இருந்து வந்த அவசர ஒலி | Indian Ship During Hormuz Firing

மேலும், இந்தியாவுக்கு செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பான கடத்தலை மீண்டும் விரைவாக ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கு ஈரான் தூதர் தங்களது அதிகாரிகளிடம் இந்தியாவின் கருத்துகளை தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இந்தியக் கப்பல் : ஈரான் தூதரை சந்திப்புக்கு அழைத்த இந்தியா

ஹோர்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இந்தியக் கப்பல் : ஈரான் தூதரை சந்திப்புக்கு அழைத்த இந்தியா

ஹோர்முஸ் நீரிணையில் குழப்ப நிலை 

உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் சுமார் ஐந்தில் ஒரு பங்கை ஏற்றுச் செல்லும் ஹோர்முஸ் நீரிணையில் தற்போது குழப்ப நிலை நிலவுகிறது.

அமெரிக்க தடையை மீறியதாகக் கூறி, நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான தனது முடிவை ஈரான் மாற்றியமைத்துள்ளது.

நீங்கள்தான் அனுமதி அளித்தீர்கள்.! ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச் சூடு - இந்திய கப்பலில் இருந்து வந்த அவசர ஒலி | Indian Ship During Hormuz Firing

“ஹோர்முஸ் நீரிணை மீண்டும் ஆயுதப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது” என ஈரானின் கூட்டு இராணுவ கட்டளை தெரிவித்துள்ளது. மேலும், இந்த நீரிணையை அணுகும் கப்பல்கள் எதிரிகளுடன் ஒத்துழைப்பதாகக் கருதப்பட்டு தாக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு இந்திய கப்பல்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ததாக ஈரான் தூதர் தெரிவித்திருந்த நிலையில், தற்போதைய சம்பவம் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US