ஹோர்முஸ் நீரிணையில் தாக்கப்பட்ட இந்தியக் கப்பல் : ஈரான் தூதரை சந்திப்புக்கு அழைத்த இந்தியா
X தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால், ஈரான் தூதரை அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளருடனான சந்திப்புக்கு இந்தியா அழைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தின் போது, ஹோர்முஸ் நீரிணையில் இன்று(18) இந்தியக் கொடி ஏந்திய இரண்டு கப்பல்கள் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இந்தியாவின் ஆழ்ந்த கவலையை வெளியுறவுச் செயலாளர் தெரிவித்தார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலுமிகளின் பாதுகாப்பு
வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பிற்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டதோடு, இந்தியாவுக்கு வரவிருந்த பல கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு ஈரான் முன்னதாக வழிவகை செய்ததையும் நினைவு கூர்ந்துள்ளது
Our statement regarding Iran ⬇️
— Randhir Jaiswal (@MEAIndia) April 18, 2026
🔗 https://t.co/05hycXPgJ6 pic.twitter.com/HwhqdNL9M8
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியைக் கடந்து இந்தியாவுக்குச் செல்லும் கப்பல்களுக்கு வசதி செய்து தரும் செயல்முறையை கூடிய விரைவில் மீண்டும் தொடங்க வேண்டும் என புது டெல்லி தெஹ்ரானை வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டிருந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற ஒரு கப்பல் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan