வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..!

Donald Trump United States of America Iran Middle East World
By T.thibaharan Apr 20, 2026 07:12 AM GMT
Report

தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2026 ஏப்ரல் 7 திகதி பாகிஸ்தான் எடுத்த முயற்சியின் காரணமாக ஏப்ரல் 8ல் இருந்து இரண்டு வாரகாலத்திற்கு தற்காலிக யுத்தநிறுத்தம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யுத்தநிறுத்தம் என்பது உலகமே யுத்தம் ஒன்றை நெருங்குகிறது என்று அச்சப்பட்டு கொண்டிருந்த மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் ஏற்படுத்தப்பட்டது.

ஆறு மணிநேரமாக மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! கடலின் நடுவில் அதிரடி காட்டிய அமெரிக்கா - வெளியான காணொளி

ஆறு மணிநேரமாக மீண்டும் மீண்டும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! கடலின் நடுவில் அதிரடி காட்டிய அமெரிக்கா - வெளியான காணொளி

யுத்த நிறுத்தம் 

இந்த யுத்த நிறுத்தம் ஏற்படக்கூடிய விளைவுகளும் அதேநேரம் ஈரான் சார்ந்தும், அமெரிக்கா சார்ந்தும் இருக்கக்கூடிய சாதக, பாதக நிலைமைகள் பற்றியும் அறிவது அவசியமானது.

அதிலும் குறிப்பாக இந்த யுத்த நிறுத்தத்தின் ஊடாக அமெரிக்க அரசியலமைப்பை எவ்வாறு ராஜதந்திர ரீதியாக ஈரான் பயன்படுத்துகிறது என்பதனையும் அறிய முடியும்.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நிகந்தனை ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதாகும். இதன் மூலம் உலகம் எதிர்நோக்கி இருக்கின்ற எரிபொருள் நெருக்கடியையும் அதனால் ஏற்படக்கூடிய பொருளாதாரம் நெருக்கடியையும் சற்று குறைவதாகும்.

வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! | The Impact Of The Us Constitution On The Gulf War

இந்த யுத்தநிறுத்தத்தின் மூலம்

1)போரை உடனடியாக நிறுத்துவது (temporary de-escalation)

2) தாக்குதல்களை தவிர்த்து பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு உருவாக்குவது.

3) உலகளாவிய எண்ணெய் மற்றும் பாதுகாப்பு பொருளாதார பிரச்சினைகளை குறைப்பது. போன்ற நோக்கங்களை தற்காலிகமாவது ஏற்படுத்தி உலகளாவிய மக்களுக்கு ஒரு அசுவாசப்படுத்தலை மேற்கொள்வது போன்ற குறிக்கோள்களை கொண்டள்ளது.

இத்தகைய ஒரு யுத்தம் நிறுத்தம் தேவையான ஒன்றே. ஆயினும் இந்த யுத்த நிறுத்தத்தை கொண்டு வருவதற்கு உழைக்க வேண்டிய சீனா, இந்தியா போன்ற முக்கிய நாடுகள் ஈடுபடவில்லை என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

இங்கே அவரவர் நலன்களும், அவரவர் இலக்குகளும் எய்யப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்க.

இது ஒரு நிலையான அமைதி ஒப்பந்தமுமில்லை, இரு தரப்பும் முழு நம்பிக்கையுடனுல்லை. இரு தரப்பும் தம்மை பலப்படுத்திக் கொள்ளவும், அல்லது இந்தப் போரிலிருந்து இலாவகமாக தப்பி பிழைக்கவோ, அல்லது பின்வாங்குவதற்கோ பொருத்தமான சூழலையும், காரணங்களையும் பெற்றுக் கொள்வதற்காகவே யுத்த நிறுத்தத்திற்கு உடன்பட்டு இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. சில இடங்களில் தாக்குதல்கள் தொடர்ந்ததாக தகவல்கள் உள்ளன.

அமெரிக்காவின் நடவடிக்கையையடுத்து அதிரடியாக உயர்ந்துள்ள எண்ணெய் விலை

அமெரிக்காவின் நடவடிக்கையையடுத்து அதிரடியாக உயர்ந்துள்ள எண்ணெய் விலை

 வளைகுடாப் போரின் போக்கு

அந்த அடிப்படையில் பல சர்வதேச நாடுகள் இதை “ யுத்தநிறுத்தம்"(fragile ceasefire”) என்று அழைக்கின்றனர்.

ஆயினும் இந்த யுத்தம் நடத்த காலத்தை தமக்கான சாதகமான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். அனேகமான நாடுகள் யுத்த நிறுத்த காலத்தில் ஏற்படும் பேச்சு வார்த்தைகள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புவதும் உண்மைதான்.

இரு தரப்பும் பரஸ்பர விட்டுக்கொடுப்போடு உலகளாவிய நாடுகளினதும், மக்களினதும் மனிதாபிமான நெருக்கடிகளை கருத்தில் கொண்டு ஆரோக்கியமான பேச்சுக்களில் ஈடுபட்டால் மாத்திரமே நிலையான அமைதி சாத்தியம்.

ஆயினும் இந்த யுத்தத்தை தவிர்க்க இப்போது இரண்டு தரப்பினரும் விரும்புகிறார்கள் என்பதும் உண்மைதான். ஆயினும் அந்த யுத்த தவிர்ப்பை தமக்கு சாதகமாக நிலைநாட்ட வேண்டும் என்பதே இருதரப்பின் உடைய அவாவாகவும் உள்ளது.

வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! | The Impact Of The Us Constitution On The Gulf War

ஏன் யுத்தநிறுத்தம்? என்பதற்கு அமெரிக்க சார்புலான வலுவான காரணம் பற்றி நோக்குகையில் இந்த வாரம் ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானங்களின் விமானிகளை ஈரானிய நிலத்திலிருந்து மீட்டெடுப்பது என்ற போர்வையில் ஈரான் மீது ஒரு தரையிறக்க தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

ஈரானின் இரண்டு அணுமின் நிலையங்கள் அண்டிய பகுதியில் அமெரிக்காவின் 150 க்கு மேற்பட்ட விமானங்கள் தொடர் தாக்குதலை தொடுத்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உண்மையில் அந்த நடவடிக்கை ஈரானிய அணுமின் நிலையங்களில் வைக்கப்பட்டு இருக்கின்ற செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கைப்பற்றுவதுதான் நோக்காகக் கொண்டிருந்தது.

ஆயினும் அந்தத் தரைத்தாக்குதல் வெற்றியளிக்கவில்லை. ஈரானின் புரட்சிகர காவல் படை வேகமான சுற்றிவழிப்புகளை செய்து மிகக்கடுமையான தாக்குதலை தொடுத்ததினால் ஈரானை விட்டு அமெரிக்க ராணுவத்தினர் துரத்தியடிக்கப்பட்டனர்.

ஆகவே ஈரான் மீது ஒரு தரையிறக்க தாக்குதலை இனி நடத்துவது சாத்தியம் இல்லை என்பதை அமெரிக்க படை முழுமையாக உணர்ந்துள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்கர்கள் 38 நாட்கள் தொடர்ந்து மேற்கொண்ட அதிஉச்ச விமானத் தாக்குதல்களினால் ஈரானை பணிய வைக்க முடியவில்லை. ஆகவே இந்த யுத்தத்திலிருந்து பின்வாங்குவதற்கு ஒரு தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றின் அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.

அத்தோடு அமெரிக்கா அரசியலமைப்பு விதிகளும் அமெரிக்காவின் உள்நாட்டு பிரச்சினைகளும் ஒரு யுத்த நிறுத்தத்தை வேண்டி நின்றன என்று சொல்வதே பொருத்தமானது.

இப்போது வளைகுடாப் போரின் போக்கை தீர்மானிப்பதில் அமெரிக்க அரசியல் அமைப்பு எத்தகைய தாக்கத்தை செலுத்தும் என்பது பற்றி பார்ப்போம்.

அமெரிக்க ஜனாதிபதி (President) ஒரு போரை நேரடியாகத் தொடங்க முடியுமா? அல்லது அவ்வாறு செய்ய அரசியல் அமைப்பு என்ன சொல்கிறது? என்று பார்ப்போமேயானால் இது மிகவும் முக்கியமான அரசியல், சட்ட கேள்வியாகும்.

அமெரிக்க அரசியல் அமைப்பின் (U.S. Constitution)அடிப்படை விதியின் பிரகாரம் போரை அறிவிக்கும் அதிகாரம் காங்கிரஸிற்குத்தான் (Congress /பாராளுமன்றம்) உள்ளது.

புதிய பேச்சுவார்த்தைகளுக்காக ஜே.டி. வேன்ஸ் பாகிஸ்தான் செல்கிறார்..

புதிய பேச்சுவார்த்தைகளுக்காக ஜே.டி. வேன்ஸ் பாகிஸ்தான் செல்கிறார்..

ராணுவ நடவடிக்கை

ஜனாதிபதி படைத் தலைமை அதிகாரிதான் (Commander-in-Chief). ஆனால் அவர் தனியாக முழுமையான ஒரு போரை அறிவிக்க முடியாது. இது அரசியலமைப்பு அதிகாரப் பகிர்வு(power sharing”) என்ற முறையில் இரண்டு முக்கிய உறுப்புரை(Articles) உள்ளன.

உறுப்புரை-l (Article I)காங்கிரஸ் போரை அறிவிக்கும் அதிகாரமும், படைக்கு நிதி வழங்கும் அதிகாரமும் உள்ளடக்கப்படுகிறது.

உறுப்புரை -ll(Article II) ஐனாதிபதி படைகளை கட்டுப்படுத்தும் மற்றும் அவசர நிலை (self-defense) ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆயினும் நடைமுறையில் என்ன நடக்கிறது என்றால் அமெரிக அரசியலமைம்பு கோட்பாட்டில் (theory) காங்கிரஸ் போரை அறிவிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் ஜனாதிபதிகள் பல முறை காங்கிரஸின் அனுமதி இல்லாமல் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்கள்.

வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! | The Impact Of The Us Constitution On The Gulf War

வியட்நாம் போருக்குப் பின்னர் War Powers Resolution (1973)எனப்படும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த "போர் அதிகாரத் தீர்மானம் -1973" என்றால் என்ன? என்பது பற்றியும் இத்தீர்மானம் கொண்டுவருுதற்கான அடிப்படைக் காரணங்கள் பற்றி தெளிவாக அறிந்துகொள்வது அவசியமானது.

அமெரிக்க-வியட்நாம் யுத்த காலத்தில் இராணுவ நடவடிக்கைகளை ஜனாதிபதி காங்கிரஸை புறக்கணித்து அல்லது தெரிவிக்கப்படாமல் போர் நடத்தப்பட்டது.

இதனால் காங்கரஸ் தனது அதிகாரத்தை மீண்டும் நிலைநிறுத்த 1973ல் இந்த சட்டத்தை நிறைவேற்றியது. அகவே வியட்னாம் போரின்போது அமெரிக்கா ஜனாதிபதி தான்தோன்றித்தனமாக போரில் நடந்துகொள்வதற்கான அடிப்படையான ஆரம்ப அனுமதியை 1964ல் டோங்கின் வளைகுடா தீர்மானம்(Gulf of Tonkin Resolution) மூலம் காங்கிரஸ் எற்கனவே கொடுத்ததுவிட்டது.

இந்த தீர்மானம் அல்ல முறையான போர் அறிவிப்பு(formal war declaration) இது ஒரு தெளிவில்லாத(vague) அனுமதிதான். ஆனாலும் இது ஜனாதிபதிக்கு மிகபெரியளவு இராணுவ அதிகாரந்தை(military power) கொடுத்ததுவிட்டது.

இந்த மட்டற்ற அதிகாரதை ஜனாதிபதி நிக்சன் கையில் எடுத்த மிகவும் சர்ச்சையான நடவடிக்கையாக வியட்நாம் போரின்போது காங்கிரஸிற்கு முழுமையாக தெரியப்படுத்தாமல் ரகசியமாக கம்போடிய(Cambodia) மீது ஒபரேஷன் மெனு(Operation Menu 1969–1970)) என்ற ரகசிய இராணுவ நடவடிக்கையாக பாரிய குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தினார்.

அதேபோல லாவோஸிலும்(Laos)அமெரிக்க ராணுவம் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தினார். இந்த ஒபரேஷன் மெனு என்பது அமெரிக்க வரலாற்றில் மிகவும் மறைக்கப்பட்ட ரகசியமாக இராணுவ நடவடிக்கைகளில் ஒன்று இது 1970களில் பத்திரிகைகள் மற்றும் பென்டகன் ஆவணங்கள் (Pentagon Papers) போன்றற்றினால் அமெரிக்க மக்களுக்கு உண்மை தெரியவந்ததடால் பெரிய அரசியல் அதிர்ச்சி ஏற்பட்டது.

ஈரான் கப்பலை அதிரடியாக கைப்பற்றிய அமெரிக்க படைகள்! பதிலடி வழங்கப்படும் என கடும் எச்சரிக்கை

ஈரான் கப்பலை அதிரடியாக கைப்பற்றிய அமெரிக்க படைகள்! பதிலடி வழங்கப்படும் என கடும் எச்சரிக்கை

மிகப்பெரிய சர்ச்சை 

இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதி தனது தலைமைத் தளபதி(Commander-in-Chief) அதிகாரத்தை பயன்படுத்தினார்.

ஆனால் இதற்கு காங்கிரஸ் “நாங்கள் அனுமதி தரவில்லை” என்ற நிலை எடுத்தனர். இதனால் ஜனாதிபதி அதிகார வரம்பை மீறுகிறாரா?” என்ற கேள்வி எழுந்தது. அமெரிக்காவில் உள்ளக எதிர்ப்புக்கள் பலமாக எழுந்தது மாணவர் போராட்டங்கள், பலமான அரசியல் விமர்சனம், ஊடகங்களின் கடும் எதிர்ப்பு வெளிவந்தபோது மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது.

இதன் விளைவு War Powers Resolution (1973) உருவானது இதனால் இனி எந்த ஜனாதிபதியும் காங்கிரஸை தவிர்த்து போர் நடத்த முடியாது. இந்த War Powers Resolution என்பது அமெரிக்க அரசியலமைப்பு திருத்தச் சட்டம் அல்ல.

இது ஒரு சாதாரண கூட்டாட்சி சட்டம். காங்கிரஸ் அமெரிக்காவில் ஜனாதிபதியின் சர்வ வல்லமை வாய்ந்த போர்சார் அதிகாரத்தை கட்டுப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு சாதாரண சட்டம் (federal law).

வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! | The Impact Of The Us Constitution On The Gulf War

மட்டுமே இது சட்டமாக்கப்பட்போது அப்போதைய ஜனாதிபதி ரிச்சாட் நிக்சன்(Richard Nixon) இதற்கு veto செய்தார், ஆனால் அதனையும் மீறி காங்கிரஸ் அந்த veto-வுக்கு மேலெழுதல்(override) செய்து சட்டமாக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது அமெரிக்க காங்கிரஸில் அரிதான மற்றும் முக்கிய அரசியல் நிகழ்வு. இந்த போர் அதிகாரத் தீர்மானம் முக்கிய விதிகள் (Key Provisions) பற்றி இங்கே பார்க்கலாம்.

1. ஜனாதிபதி படைகளை போரில் ஈடுபடுத்தினால் 48 மணி நேரத்திற்குள் காங்கிரஸிற்கு தகவல் அறிவிக்க வேண்டும்.

2. காங்கிரஸில் அனுமதி இல்லையெனில் 60 நாட்களுக்குள் இராணு நடவடிக்கையை (military action) முடிக்க வேண்டும்.

3. அதன் பின்னர் 30 நாட்களுக்குள் படைகளை திரும்ப அழைக்கப்பட வேண்டும்.

4. தேவை ஏற்படின் காங்கிரஸ் எந்த நேரத்திலும் resolution மூலம் போரை நிறுத்த முடியும்.

இந்த தீர்மானத்திலும் பின்னாளில் சில முக்கிய விமர்சனங்கள் விசனங்கள், நடைமுறைபிரச்சினைகள் போன்றவை இருந்தன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். சில ஜனாதிபதிகள் இது அரசியல் அமைப்புக்கு எதிரானது என கூறுகிறார்கள்.

அத்தோடு நடைமுறையில் பல நேரங்களில் 60 நாள் விதி பின்பற்றப்படவில்லை. போர் என்ற வார்த்தைக்கு பதிலாக குறுகிய தாக்குதல்கள் “war இல்லை” என்று கூறி நெருக்கடி தவிர்க்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயினும் இன்றைய சூழ்நிலையில் ஈரான் போன்ற நெரிக்கடி மோதலில்(conflicts) இந்த சட்டம் மீண்டும் விவாதத்திற்கு வருவது மாத்திரமல்ல அதனை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டிய அவசியமும் காங்கிரஸிற்கு எழுந்துள்ளது மாத்திரமல்ல அமெரிக்க மக்களின் மனதில் தமது பிள்ளைகள் போரில் இறப்பதை அனுமதிக்க மாட்டார்கள்.

இந்த அடிப்படையிலேயே அன்றைய அமெரிக்கா காங்கிரஸின் தீர்மானத்தை இப்போது வளைகுடா போர் பதட்டத்தில் ஈரான் தனது இராணுவ,அரசியல் மூலோபாயத்திற்கு சாதகமாக பயன்படுத்தி சர்வதேச அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயல்கிறது.

இது அமெரிக்க அரசியலமைப்பபையே தனக்கு அரணாக அமைத்துள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது.

இந்த War Powers Resolution உண்மையில் தொழிற்படுகிறதா? “சட்டம் உள்ளதுதான் ஆனால் கடுமையாக அமல்படுத்தப்படவில்லை”என்று சொல்லலாம் உதாரணமாக பில்கிளிங்டன்1999ல் கொசோவா போர்(Kosovo War (1999) NATO மூலம் தாக்குதல் நடத்தியார் காங்கிரஸிற்கு அதிகாரப்பூர்வமாக போரை அறிவிக்கவில்லை.இதனை கிளிங்டன் "மனிதாபிமான தலையீடு"(“humanitarian intervention” )என்று நியாயப்படுத்தினார்.

George W. Bush ஈராக் போரில் காங்கிரஸை அனுமதி இருந்தது (Authorization for Use of Military Force – AUMF) இது War Powers சட்டத்தை முறையாக பின்பற்றிய எடுத்துக்காட்டு பராக் ஒபாமா லிபியா தலையீட்டில் (Libya Intervention) 60 நாள் வரம்பை மீறியும் நடவடிக்கை தொடர்ந்தது. இதற்கு “இது முழு அளவிலான போர் அல்ல (full-scale war) என்று விளக்கம் அளித்துள்ளார்.

ரொனாட் ரம்ப் காசிம் சுலைமானியின் கொலை (Killing of Qasem Soleimani) ஈரான் மீது நேரடி தாக்குதல். இவையெல்லாம் காங்கிரஸின் War Powers மூலம் கட்டுப்படுத்த முயன்றது ஆனால் முழுமையாக நிறுத்த முடியவில்லை. ஜனாதிபதிகள் “இது போர் இல்லை” என்று கூறி சட்டம் தவிர்க்கப்படுகிறது. அகவே War Powers Resolution சட்ட ரீதியாக வலுவானதுதான் ஆனால் அரசியல் ரீதியாக பலவீனமாகவும் உள்ளது.

ஈரானின் பார்வை

ஆனால் அது சாதாரண நாடுகள் மீது அத்தகைய ஒரு போரை ஏமாற்றகரமாக அமெரிக்க ஜனாதிபதிகளால் நடத்த முடியும் ஆனால் உலகின் மையப் புள்ளியாகவும் உலகிற்கு சக்தி வளங்களை வழங்குகின்ற ஒரு கேந்திர இஸ்தானத்தில் நடத்தப்படுகின்ற போர் என்பதனால் இந்தப் போரில் நடத்தப்படுகின்ற ஒவ்வொரு அசைவுகளையும் இந்த உலகம் முழுமையாக கண்காணித்துக் கொண்டிருக்கும் என்ற அடிப்படையில் இந்தப் போரை கண்டபடி அமெரிக்க ஜனாதிபதியால் நீண்ட காலத்திற்கு கையாள முடியாது என்பதே உண்மையாகும். இந்தப் பலவீனமே ஈரானுடைய பலமாகவும் உள்ளது.

அதே நேரத்தில் ஈரானின் பார்வையில் தொடர்ந்து அமெரிக்காவின் அழித்தொழிப்பு யுத்தத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருப்பதனால் ஏற்படக்கூடிய மக்களின் அவல நிலையும், தமது அரசியல், ராணுவ, அதிகார ஒழுங்கை மீள் ஒழுங்குபடுத்துவதற்கும் ஒரு கால அவகாசம் தேவைப்பட்டது.

இதனையும் மிஞ்சிய ஒரு அரசியல் ராஜதந்திர நகர்விற்கு அவகாசம் அவர்களுக்கு தேவைப்பட்டது.

வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! | The Impact Of The Us Constitution On The Gulf War

அதுவும் குறிப்பாக 38 நாள் கழிந்த நிலையில் அமெரிக்காவின் அரசியலமைப்பின் ஊடாக 60 நாட்களுக்கு மேல் ஈரான் மீது ஒரு தாக்குதலை நடத்த முடியாது.

அதற்கு அமெரிக்க அரசியல் சாசனத்தின் விதி இல்லை என்ற அடிப்படையில் இரண்டு வாரத்தை கழித்து விட்டால், மேலும் ஒரு எட்டு நாட்களுக்கு தாக்கு பிடித்து விட்டால் இயல்பாக யுத்தம் பின்னோக்கித் தள்ளப்படும் என்பதை அவர்கள் நன்குணர்ந்திருக்கிறார்கள்.

ஆகவே இந்த போர் நிறுத்தம் அவர்களுக்கும் தேவைப்பட்டது. அதேபோல இந்த யுத்தநிறுத்த ஏற்பாட்டாளராக பாகிஸ்தான் ஈடுபட்டதனால் அது இப்போது தன்னை உலகின் முக்கிய சமாதான புறாவாக ராஜதந்திர ரீதியில் வெளிப்படுத்தி தனது இமேஜை தக்க வைத்துள்ளது.

உண்மையில் இந்தப் பாத்திரத்தை எடுக்க வேண்டியது இந்தியாதான்.

ஆனால் மௌனமாக இருந்து இந்தியா உலகளாவிய ராஜதந்திர அந்தஸ்தையும், பெருமானத்தை இழந்துவிட்டது என்பதும் உண்மைதான்.

இந்த அடிப்படைகளில் இருந்து உற்று நோக்கினால் வளைகுடா போர் அல்லது அமெரிக்காவின் பாணியில் சொல்வதானால் அழித்தொழிப்பு தாக்குதல் நிறைவுக்கு வந்துவிட்டது என்று கருதுவதே பொருத்தமானது.

தற்காலிக யுத்த நிறுத்தம் பல்வேறுபட்ட இழுபறிகளுக்கு மத்தியில் ஒரு சமச்சீரற்ற அல்லது தீர்வற்ற உப்புச்சப்பான ஒரு ஒப்பந்தத்தை கூட வரைய வழிவகுக்கலாம். ஆனால் ஈரான் தனது புவிசார அரசியலிலும், ஹார்மோஸ் நீரணையில் தனது மேலாண்மையை நிலை நிறுத்துவதில் பின்னடையவில்லை. அது ஒரு படி முன்னேதான் சென்றிருக்கிறது.

ஆயினும் அதனுடைய உள்நாட்டு அழிவு என்பது மிகப் பாரதூரமானதுதான்.

இந்த அழிவிலிருந்து ஈரான் நீண்ட எழுவதற்கு இன்னும் குறைந்தது 15 ஆண்டுகள் ஆவது தேவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆயினும் இந்தக் காலப்பகுதிக்குள் ஈரான் ஒரு அணுகுண்டு வெடிப்பை செய்யாமல் ஓயப் போவதில்லை என்பதை துணிந்து கூற முடியும்.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.thibaharan அவரால் எழுதப்பட்டு, 20 April, 2026 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US