பிரித்தானியாவில் தியாக தீபம் அன்னை பூபதியின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு
தியாக தீபம் அன்னை பூபதியின் 38 ஆவது நினைவு தின நினைவேந்தல் அனுஸ்டிப்பு லன்டனில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் லண்டனில் வசித்து வரும் ஈழத்தமிழர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
உருவப்படம் தாங்கிய ஊர்தி
அன்னை பூபதியின் 38ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படம் தாங்கிய ஊர்தி இலங்கையின் வடக்கு கிழக்கில் பகுதிகளில் ஊர்வலமாக முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை ஈழத்தமிழர்கள் வாழ்ந்து வரும் பிரித்தானியாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் அன்னை பூபதியின் 38ஆவது நினைவு தின வணக்க நிகழ்வு உணர்ச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 6 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam