விடுதலை புலிகளின் முக்கியஸ்தரை சந்திக்கும் அநுரவின் இரகசிய நகர்வு! கேள்வி எழுப்பும் அரசியல்வாதி
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் நெடியவனை சந்திப்பதற்காக ஜெர்மனி சென்றாரா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நடந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி ஜெர்மனி செல்வதற்கு முன்பு, விடுதலை புலிகளின் முக்கியஸ்தர் நெடியவனை சந்திக்க அந்நாட்டிற்கு செல்வதாக சமூக ஊடகங்களில் ஒரு கதை பரவியது.
சான்சலரை ஜனாதிபதி சந்திக்கவில்லை
இதனால், ஜெர்மன் அரசாங்கத்தின் தலைவரான சான்சலரை ஜனாதிபதி சந்திக்க மாட்டார் என்றும் சமூக ஊடகங்களில் பலரும் கூறினர்.
எனவே, நாங்கள் ஒரு கூட்டத்தை நடத்தி, ஜெர்மனி செல்வதற்கு முன்பு இந்தக் கதைகளின் உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு அவரிடம் கோரிக்கை விடுத்தோம்.
ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. சமூக ஊடகங்களில் கூறப்பட்டபடி ஜெர்மன் அரசாங்கத்தின் தலைவரான சான்சலரை ஜனாதிபதி சந்திக்கவில்லை. மாறாக, ஜெர்மனியில் ஜெர்மன் ஜனாதிபதியையும் வெளியுறவு அமைச்சரையும் மட்டுமே அவர் சந்தித்தார்.
விளக்கம்
ஜெர்மனியின் அரசாங்க வடிவம் இலங்கையிலிருந்து வேறுபட்டது. இலங்கையின் ஜனாதிபதி, அரசின் தலைவராகவும் அரசாங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். ஜெர்மனியின் ஜனாதிபதி நாட்டின் தலைவராக இருந்த போதிலும் அரசாங்கத்தின் தலைவராக இல்லை.
ஜெர்மன் ஜனாதிபதியைச் சந்திக்க ஜெர்மனி செல்வது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை விடுத்து இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவைச் சந்திக்க இந்தியா சென்று வருவது போன்றது.
எனவே, ஜனாதிபதி இவற்றுக்கு விளக்கமளிக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



