பிரித்தானியாவில் பயணித்த விமானத்தில் குழப்பம்! ட்ரம்பிற்கும் மிரட்டல்
இங்கிலாந்தின் லூட்டனில் இருந்து ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவிற்குச் சென்ற ஈஸிஜெட் விமானத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய 41 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்றையதினம்(27.07.2025) இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர், நடுவானில் விமானம் பயணித்துக்கொண்டிருந்த போது, 'அமெரிக்காவிற்கு மரணம்', 'ட்ரம்பிற்கு மரணம்' மற்றும் 'அல்லாஹு அக்பர்' என கூச்சலிட்டுள்ளார்.
பொலிஸாரின் பகுப்பாய்வு
இதனையடுத்து, இரண்டு பயணிகள் அவரை தள்ளி கீழே வீழ்த்த முற்பட்டுள்ளனர்.
🚨 An EasyJet flight from London Luton to Glasgow has been diverted and is currently parked on a remote stand at Glasgow Airport due to a passenger making bomb threats on board.
— Intel Tower🗽 (@inteltower) July 27, 2025
The aircraft, an Airbus A319 (G-EZAN), declared an emergency (squawk 7700) shortly before landing. pic.twitter.com/TfUSfZmwqJ
அதன் பின்னர், விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில், ஸ்கொட்லாந்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் விமானத்தில் பதிவு செய்யப்பட்ட காணொளியை பகுப்பாய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஒரு தனி நபரால் நடத்தப்பட்டது எனவும் பின்னணியில் எந்த அமைப்பும் இல்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



