வெளிநாடொன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு : பொலிஸ் பிரதானி பதவி விலகல்
அமெரிக்காவின் சியாட்டில் நகரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைக் கையாண்ட விதம் குறித்துக் கேள்விகள் எழுந்த நிலையில், அந்நகர பொலிஸ் பிரதானி ஷான் பார்ன்ஸ் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
சியாட்டில் நகரில் நடைபெற்ற புகழ்பெற்ற 'பைட் ஒஃப் சியாட்டில்' உணவுத் திருவிழாவின் போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 வயதுக் குழந்தை உட்பட நால்வர் காயமடைந்ததுருடன் மேலும் மூவர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் 15 வயது சிறுவன் ஒருவனைக் கைது செய்த நிலையில், தப்பியோடிய மற்றொரு நபரைத் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது சியாட்டில் நகரத்திற்கு வெளியே நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றிருந்த பொலிஸ் பிரதானி பார்ன்ஸ், இதுகுறித்து பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் உடனடியாகச் சரியான தகவல்களைத் தெரிவிக்கத் தவறினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

துப்பாக்கிச் சூடு நடந்து 5 மணி நேரம் வரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படாதது பொதுமக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து சியாட்டில் மேயர் கேட்டி வில்சன், பார்ன்ஸின் இராஜினாமாவை அறிவித்துவிட்டு, புதிய இடைக்கால பொலிஸ் பிரதானி 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவமுள்ள அண்ட்ரே சேல்ஸ் என்பவரை நியமித்துள்ளார்.
சியாட்டில் நகரில் கடந்த மூன்றாண்டுகளில் நான்கு பொலிஸ் பிரதானிகள் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வரலாற்றை புரட்டிப் போட்ட நீதிமன்ற தீர்ப்பு..! ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri