ரஷ்யாவை உலுக்கிய நிலநடுக்கம்! இணையத்தில் பரவலான கடல் சிங்கங்கள் தப்பிக்கும் காட்சி
நிலநடுக்கத்திற்கு மத்தியில் ரஷ்யாவின் குரில் தீவுகளில் பாறைகள் சரிவுகளில் இருந்து ஸ்டெல்லர் கடல் சிங்கங்கள் தப்பிக்கும் பரபரப்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
பேராசிரியர் குரோமோவ் (Professor Khromov) கப்பலின் ஊழியர் நிகிதா சின்சினோவ் (Nikita Sinchinov) எடுத்த இந்த காணொளியில், நிலநடுக்கத்தால் பாறைகள் சரிவதை தவிர்ப்பதற்காக கடல் சிங்கங்கள் கொந்தளிப்பான கடலுக்குள் குதிப்பது பதிவாகியுள்ளது.
பரபரப்பான காட்சி
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையை ஒட்டி 8.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று(30) காலை ஏற்பட்டது.
🚨Dozens of Steller sea lions flee tsunami waves on Russia’s Antsiferov Island, captured in striking footage#Russia #earthquake #Tsunami #Hawaii #California #Japan #kuril #TsunamiVideo pic.twitter.com/Bmrs4DSi2k
— TheWarPolitics 🇮🇳 (@TheWarPolitics0) July 30, 2025
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக பசிபிக் பெருங்கடலின் மறுபக்கத்தில் உள்ள ஹவாய் மற்றும் அலஸ்கா பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, ரஷ்யாவின் குரில் தீவுகளில் பாறைகள் சரிந்ததால், ஸ்டெல்லர் கடல் சிங்கங்கள் (Steller sea lions) அங்கிருந்து தப்பிக்கும் பரபரப்பான காட்சிகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



