ரஷ்யாவுக்கு தெரியாமல் அமெரிக்க இராணுவம் கடத்திச்சென்ற விஞ்ஞானிகள் (VIDEO)
ஜேர்மனியின் நவீன ராக்கட் தொழில்நுட்பமோ அல்லது அத்தொழில்நுட்பங்களைத் தயாரித்த விஞ்ஞானிகளோ ரஷ்யாவின் கரங்களுக்கு விழுந்து விடும் முன்னர் அவற்றினை கைப்பற்ற அமெரிக்கா துடித்துக்கொண்டிருந்தது.
கோல்ட் வார் என அழைக்கப்படும் பனிப்போரின் ஆரம் பத்தன்று இந்த இரகசிய பயணத்தைத் தான் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
1944ம் ஆண்டு ஜூன் மாதம் 6ம் திகதி சோமனாவ தரையிரக்கம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஹிட்லரிடம் இருந்து கடுமையான பதிலடி மேற்கொள்ளப்பட்டு ஆகும் என்று எதிர்பார்த்தார்கள்.
நேச நாட்டுப் படைத்தளபதிகள் நேமன்வித் தரையிரக்கத்திற்கு ஹிட்லர் எப்படியாவது பலிவாங்கியே தீருவார் என்று அவர்கள் அச்சம் கொண்டிருந்தார்கள். அவர்கள் அச்சப்பட்ட படியே ஓர விசித்திரமான பதில் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.
ஹிட்லர் நேமன் வித் தரையிரக்கம் நடைபெற்று 7வது நாள் ஒரு விசித்திரமான பொருள் வானில் பறப்பது கண்டு ஆச்சரியப்பட்டார்கள் நேச நாட்டு படைவீரர்கள். மணிக்கு 400 மைல் வேகத்தில் பிரித்தானியாவின் வான் பரப்பில் பறந்த அம்மர்ம பொருள் பிரித்தானிய மக்களின் ஆச்சரிய கண்களை அகல விரித்திருந்தது. ஆரம்பத்தில் அது ஒரு விமானமாக இருக்கலாம் என நினைத்திருந்தனர்.
ஆனால் பறந்து கொண்டிருந்த அம்மர்ம பொருள் திடீரென இலக்கில் விழுந்து வெடிக்கும் போது தான் தெரிகிறது. அது ஓர் பறக்கும் வெடிகுண்டு என்று அடுத்து வந்த நான்கு நாட்களிலும் இது போன்ற பறக்கும் குண்டுகள் லண்டன் நகரில் பல பகுதிகளில் பறந்து நகரிற்குள் வந்து விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
ஜூன் மாதம் 18ம் திகதி லண்டன் நகரில் விழுந்த பறக்கும் குண்டினால் அந்நகரில் வாழ்ந்த 121 மக்களின் உயிர்களைப் பலி வாங்கி தனது பசி தீர்த்திருந்தது.
ஹிட்லரால் தயாரிக்கப்பட்டு திடீரென அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நவீன பீமன் ராக்கட்டை ரக பறக்கும் குண்டுகள் நேச நாடுகளை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
இது தொடர்பான மேலும் பல தகவல்களை உள்ளடக்கி வருகின்றது உண்மையின் தரிசனம் விசேட தொகுப்பு,