பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது குறித்து வெளியான அறிவிப்பு
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9ஆம் தர வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுசன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டிலுள்ள பாடசாலைகளில் இதுவரையில் மீள ஆரம்பிக்கப்படாத வகுப்புக்களை ஆரம்பிக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) நாடாளுமன்றில் வைத்து நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
மேலும், கடந்த இரண்டு வாரங்களில் காலி மாவட்டத்தில் 64 பாடசாலை மாணவர்கள் கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பிராந்திய தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் எரங்க ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 21 மணி நேரம் முன்
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam