மொனராகலையில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு
மொனராகலை, வெல்லவாய - சிறிபுர பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்றையதினம்(3.5.2026) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த, புதுருவகல வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியே உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
மேற்படி மாணவி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வெஹெரயாய கங்காராம விகாரையிலுள்ள பௌத்த அறநெறிப் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த வெல்லவாய இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (இ.போ.ச.) சொந்தமான பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த தந்தையும், மகளும் உடனடியாக அந்தபானாகல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார் என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணை
உயிரிழந்த மாணவியின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெற்றன.

சம்பவத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து குடாஓய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan