ஹட்டன் பிரதான வீதியில் பற்றியெரிந்த முச்சக்கர வண்டி - உயிர்தப்பிய சாரதி
நல்லத்தண்ணி பகுதி இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று வீதியில் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(04.05.2026) ஹட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் டிக்கோய தோட்டப் பகுதியில் காலை சுமார் 10:15 மணியளவில் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பயணியுடன் உயிர் தப்பிய சாரதி
பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு, இயந்திரத்தில் கோளாறை ஏற்படுத்தி தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த பயணியும் சாரதியும் உயிர்தப்பியுள்ளனர்.
இந்நிலையில், தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், முச்சக்கர வண்டியின் இயந்திர பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு