பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் விபத்து! மூவர் வைத்தியசாலையில்...
நுவரெலியா - உடப்புசல்லாவ பிரதான வீதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (06.05.2025) பிற்பகல் நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் இராகலை புரூக்சைட் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சிகிச்சை
குறித்த வான் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு சிறுவர் ஒரு பெண் மற்றும் வானின் சாரதி ஆகியோர் அடங்குவதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.









மனோஜை கட்டிப்போட்டு ரூமில் அடைத்த குடும்பம், கதறும் ரோஹினி.. இது தேவையா, சிறகடிக்க ஆசை கலகலப்பு எபிசோட் Cineulagam

லண்டன் புறப்பட்டபோது 260 உயிர்களை பறித்த கோர விமான விபத்து: அடிக்கடி மருத்துவ விடுப்பெடுக்கும் விமானிகள் News Lankasri
