இலங்கையில் தவிர்க்கப்பட்ட மற்றுமொரு பாரிய விபத்து - பல உயிர்களை காப்பாற்றிய சாரதி
இலங்கையில் மற்றுமொரு விபத்து தவிர்க்கப்பட்டுள்ள நிலையில் 20இற்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
பலாங்கொட - இரத்தினபுரி வீதியில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் மீது மரக்கிளை விழுந்தபோது, ஓட்டுநர் உடனடியாகப் பேருந்தை வீதி ஓரமாக நிறுத்தியமையால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
பலாங்கொட போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று ,பலாங்கொடை - இரத்தினபுரி வீதியில் தேவலகந்த நோக்கிச் நேற்று சென்று கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
பயணிகளின் உயிர்
பேருந்தின் சாரதியான சரத் சந்திரவன்சவின் திறமையால் பேருந்து மற்றும் பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டதாக பலாங்கொட போக்குவரத்து சபையின் மேலாளர் தர்ம ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
பலத்த காற்று காரணமாக பேருந்தின் முன் இருந்த ஒரு மரத்தின் கிளை பேருந்தின் மீது விழவிருந்த நிலையில் ஓட்டுநர் பேருந்தை வீதியின் ஓரத்திற்கு திருப்பி விபத்தைத் தவிர்த்துள்ளார்.
பேருந்து முன்னோக்கிச் சென்றிருந்தால், ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. பேருந்து சாரதி தனது திறமையால் அந்த நேரத்தில் பேருந்தில் இருந்த 20 உயிர்களை காப்பாற்றியுள்ளதாக பலரும் பாராட்டியுள்ளனர்.
பாரிய விபத்து
இதேவேளை, பாணந்துறையில் இன்று காலை ஏற்படவிருந்த பாரிய ரயில் விபத்தை தனிநபர் ஒருவர் தவிர்த்துள்ளார்.
தண்டவாளம் உடைந்திருந்த நிலையில், அதனை கண்ட பிரதேசவாசி ஒருவர், தனது சிவப்பு நிற சண்டையை கழற்றி ரயில் ஓட்டுநருக்கு ஆபத்தை தெரியப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக பாதுகாப்பாக ரயில் நிறுத்தப்பட்டமையினால் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 7 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
