பாடசாலை மாணவி மீது கத்திக்குத்து தாக்குதல்
பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் மினிபே-ஹசலக்க,மொறயா பகுதியில் இன்று(08.08.2023) காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாணவி மீது தாக்குதல் நடத்திய இளைஞரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம்
தாக்குதலில் படுகாயமடைந்த 11ஆம் தரத்தைச் சேர்ந்த மாணவி தற்போது மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞர், தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய திருமணமாகாதவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவி முகநூல் ஊடாக அந்த இளைஞருடன் அறிமுகமாகி சுமார் ஒரு வருட காலமாக காதல் தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன் பின்னர் குறித்த மாணவி காதல் உறவை நிறுத்தியதால் தான் அவரை தாக்கியதாக இளைஞன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாணவியின் உடலில் 3 சிறிய வெட்டுக் காயங்கள் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹசலக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |