பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : அடுத்தக்கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கையில் உள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2023ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வித் திணைக்களம் விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.
மீள ஆரம்பிக்கப்படும் கல்வி நடவடிக்கைகள்
தற்போது பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மீண்டும் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்தநிலையில் குறித்த காலப்பகுதியில் 2023ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணையின் 2ஆம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.
போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு
இதேவேளை, நேற்று முதல் வற் வரி திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் போது பாடசாலை போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri