மட்டக்களப்பில் காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்ட பாடசாலை
மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட போரதீவுப்பற்று மண்டூர் 39 ஆம் கிராமம் செந்நெறி வித்தியாலயம் இன்று (14) அதிகாலை காட்டு யானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.
அதிகாலை நேரத்தில் பாடசாலை வளாகத்தில் உள் நுழைந்த காட்டு யானைகள் பாடசாலை சுற்று வேலி, வகுப்பறை கட்டிடம், பாடசாலை மேற்கூரை ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளது
பெளதீக வளப்பற்றாக்குறை
அதிகஸ்டப்பிரதேச பாடசாலையான இவ்வித்தியாலயத்தில் 148 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் இப்பாடசாலையானது அடிக்கடி காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி வரும் நிலையில் மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியிலே கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த பாடசாலையின் பெளதீக வளப்பற்றாக்குறையை தீர்த்து வைப்பதற்கு பிரதேச அரசியல பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 6 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
