நாட்டு மக்களுக்கு ரணில் வெளியிடவுள்ள விசேட செய்தி
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம்(17) நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.
முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ள நிலையில், நாளை மறுதினம் அவர் வெளியிடவுள்ள அறிக்கை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.
மேலும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் அடைந்த தோல்வியின் பின்னர் நாட்டு மக்களுக்கு வழங்கும் முதலாவது செய்தியாகவும் இந்த அறிக்கை அமைகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விசேட அறிக்கையின் மூலம் நாட்டின் அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்துவார் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதேவேளை, அடுத்த தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் தேசிய பட்டியலிலிருந்து நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை எனவும் தீர்மானித்துள்ள ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் காஸ் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய கூட்டணிக்கு தலைமை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.