பாடசாலைகள் மூடப்படுவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!! மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை
இலங்கையில் இன்றைய தினம் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலும், மேலும் பல முக்கிய தகவல்களும் செய்திகளாக தமிழ்வின் தளத்தில் வெளியாகியிருந்தன.
அவற்றில் மிக முக்கிய செய்திகளை நீங்கள் தவறவிட்டவர்களாயின் பின்வரும் செய்திகளை கட்டாயம் படிக்கவும்.
1. பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை குறைக்க அரசாங்கமும் மத்திய வங்கியும் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க >>> பொருளாதாரச் சிரமங்களைக் குறைக்க மத்திய வங்கி எடுத்துள்ள நடவடிக்கை
2. கடந்த மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து ஜனாதிபதி அமரும் நாற்காலியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த இளைஞர் ஒருவர் தெரணியகலை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயதான இந்த நபர் சமன்புரகம என்ற பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க >>> ஜனாதிபதியின் நாற்காலியில் அமர்ந்த நபர் கைது
3. அடுத்த நாடாளுமன்ற அமர்வு இம்மாதம் 9ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>> ஜனாதிபதி அருகில் இடம்பிடித்த ஒற்றை சிவப்பு ரோஜா! அடுத்த அமர்வு தொடர்பில் அறிவிப்பு
4. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக மலையகத்தின் பல பிரதேசங்களில் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கடுமையான மழை மற்றும் மண்சரிவு காரணமாக ஹட்டன் - கொழும்பு வீதியின் கினிகத்தேனை பிரதேசத்திலும், ஹட்டன் - கண்டி வீதியின் ஸ்டேடன் எஸ்டேட் பிரதேசத்திலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க >>> நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து துண்டிப்பு
5. தென்னிலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் செல்லும் சீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வு கப்பல், இந்தியா - இலங்கை உறவுகளை மீண்டும் சீர்குலைக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆசிய பசுபிக் பிராந்திய ஆய்வுக்கான அமெரிக்க சஞ்சிகையான தெ டிப்ளொமெட் இதனை குறிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க >>> இந்திய - இலங்கை உறவுகளை மீண்டும் சீர்குலைக்கும் சீனா! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
6. நாட்டில் கோவிட் தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில், பாடசாலைகள் தொடர்ந்து நடத்தப்படுமா என்பது குறித்து கல்வி அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
கோவிட் தொற்று பரவினாலும் பாடசாலைகள் மீள மூடப்படாது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க >>> பாடசாலைகள் நடத்தப்படுவது தொடர்பான புதிய அறிவிப்பு
7. இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 22 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 49 சதமாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, மற்ற வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் சற்று ஏற்ற, இறக்கம் காணப்படுகின்றது.
மேலும் படிக்க >>> டொலர் மற்றும் ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்
8. நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் ஆற்றிய உரை அவருக்கு எதிராக அவரே ஆற்றிய உரை என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இன்றைய உரையானது இதற்கு முன்னர் இந்த நாட்டின் அனைத்து ஜனாதிபதிகளும் முன்வைத்த உரையே ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க >>> தனக்கு எதிராக தானே உரையாற்றிய ரணில்! 45 வருட நாடாளுமன்ற அனுபவம் குறித்து பகிரங்க கேள்வி
9. பிரித்தானியாவில் 10 வருடங்களுக்கு முன்னர், கடத்தப்பட்ட தனது மகளை தேடும் இலங்கையை சேர்ந்த தந்தை ஒருவர் முக்கிய தகவல்களை வெளிட்டுள்ளார்.
தற்போது காலியில் வாழும் சிறிவர்தன என்பவர் தனது மகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் படிக்க >>> பிரித்தானியாவில் மர்ம கும்பலால் கடத்தப்பட்ட இலங்கை சிறுமி - தந்தை வெளியிட்ட தகவல்
10. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க >>> ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சற்று முன்னர் கைது

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 36 நிமிடங்கள் முன்

Puzzle iq test: படத்தில் உள்ள காதல் ஜோடிகளில் யார் ஏலியன்? 5 விநாடிகளில் பதிலை கண்டுபிடிங்க Manithan

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
