ஜனாதிபதி அருகில் இடம்பிடித்த ஒற்றை சிவப்பு ரோஜா! அடுத்த அமர்வு தொடர்பில் அறிவிப்பு (Photos)
நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு தொடர்பில் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜனாதிபதி கொள்கை விளக்க உரையை ஆற்றியிருந்தார்.
எச்சரிக்கையுடன் ஜனாதிபதி விடுக்கும் அழைப்பு! தமிழர்கள் குறித்தும் அறிவிப்பு - அரசியல் மாற்றங்களுக்கு தயாராகும் ரணில் (Video) |
அடுத்த அமர்வு எப்போது..!
இதன் பின்னர் அடுத்த நாடாளுமன்ற அமர்வு இம்மாதம் 9ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இன்றைய தினம் ஜனாதிபதி அருகில் இடம்பிடித்திருந்த ஒற்றை சிவப்பு ரோஜா மலர் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.
சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து ஜனாதிபதி கொள்கை விளக்க உரையினை மேற்கொள்ளும் போது சபாநாயகர் மேசையில் வைக்கப்பட்டிருந்த ஒற்றை சிவப்பு ரோஜா புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஏனெனில் சபாநாயகர் மேசையில் வழமையாக தண்ணீர் மட்டுமே காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.