புலம்பெயர் தமிழர்களிடம் ஜனாதிபதி ரணில் விசேட அறிவிப்பு (Video)

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe President of Sri lanka Sri Lanka Government
By Mayuri Aug 03, 2022 01:03 PM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர்களை எவ்வாறு தெரிவு செய்தாலும் நாம் அனைவரும் இலங்கையர்களே, அதேபோல நானும் எவ்வாறு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் நானும் இன்று இலங்கையராகவே உங்கள் முன் நிற்கிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து வரும் நிலையில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நாடு இதுவரை முகம் கொடுக்காத ஓர் பிரச்சினையை இப்போது முகம் கொடுக்கிறது. இந்த நிலையை மாற்ற இன்று நாம் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் அனைவரும் இணைந்து செயல்படுவதே மக்களின் எதிர்பார்ப்பு. பிரிந்து செயற்படுவதன் மூலம் முழு நாடும் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அத்துடன், அனைவரையும் இணைந்து செயல்பட அழைக்கிறேன். சர்வகட்சி அரசாங்கம் தொடர்பாக நான் கலந்துரையாடல்களை தொடங்கி இருக்கிறேன். சர்வகட்சி அரசாங்கம் என்பது ஒரு கட்சியாக செயல்படுவது அல்ல.

அனைவரும் இணைந்து செயல்படுகின்ற ஒரு அரசாங்கம் ஆகும். இதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். சர்வகட்சி அரசாங்கத்தின் அவசியத்தை நான் மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

இருளுக்கு சாபமிடுவதைவிட, ஒரு விளக்கையாவது ஏற்றுவது , நாட்டுக்காக நான் ஆற்றும் கடமை என நினைத்தேன். அதனால்தான் சவாலை ஏற்றேன். நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைவோம். ஆகையால், சர்வக்கட்சி அரசியல் இணையுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் பிரச்சினைகள் வெகு விரைவில் தீர்க்கப்படும். இன்று எரிபொருள் எமக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அதனை தீர்ப்பதற்றக்காக நாம் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம்.

இலங்கையை கட்டியெழுப்ப நீண்ட கால தீர்வுத் திட்டம் தேவைப்படுகிறது. பொருளாதாரத்தை ஸ்திர நிலைக்கு கொண்டு வர வேண்டும். எதிர்காலத்தில் நாம் செய்ய இருக்கும் காரியங்களை இனிவரும் காலங்களில் நாடாளுமன்றத்தில் அறிவிப்போம்.

IMF உதவிகளை பெற்று இம்மாதம் முடிவதற்கு முதல் உதவிகளை பெற்றுகொள்வோம். இலங்கையின் வரலாற்றின் படி மீண்டும் அனைத்து நாடுகளுக்கும் அரிசி ஏற்றுமதியாளராக நாம் மாறுவோம். பொருளாதார பிரச்சினைகளினால் வியாபாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மக்களுக்கு வேலைவாய்ப்புக்கள் இல்லாமல் போயுள்ளன.

ரூபாவின் பெறுமதியும் விழுந்துள்ளது. இதேவேளை சுற்றுலாப்பயணிகள் இந்த மாதத்தில் இலங்கைக்கு வருவார்கள். மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படுவதுடன், அரசாங்க வீடுகளில் வாழ்பவர்களுக்கு வீட்டிற்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படும்.

எமது பொருளாதாரம் ஏன் விழுந்தது, அதற்கான காரணம் என்ன என்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். காலத்துக்கு காலம் நபருக்கு நபர் ஏற்றல் போல் பொருளாதார கொள்கைகளை மாற்றுவது நல்லதா என்பதை பார்க்க வேண்டும். நிலையான பொருளாதாரம் 2026இற்குள் நிறுவப்பட வேண்டும்.

நீண்ட கால திட்டங்கள் என்னால் கையாளப்பட்டு வருகின்றன. நான் மற்ற அரசியல்வாதிகளைப் போல் அல்ல, நாட்டின் எதிர்காலத்திற்காக உழைக்கிறேன். நாம் ஒன்றாக இணைந்து இந்த நிலையை மாற்ற வேண்டும். அணைத்து நாடுகளுடனும் இணைந்து நாம் வேலை செய்வோம்.

அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து மக்கள் ஏமாந்து போய் இருக்கிறர்கள். இதனால் தான் அவர்கள் ஆட்சி மாற்றத்தை கேட்டார்கள். அனைவரையும் இணைத்து அரசியலில் மாற்றங்களை கொண்டு வருவேன். அஹிம்சை வழியில் இடம்பெற்று வந்த போராட்டங்கள் மெதுவாக திசை மாறின. அஹிம்சை வழியில் போராடுபவர்களை நான் ஒரு போதும் தொடமாட்டேன்.

அவ்வாறு போராடுபவர்கள் மீது ஏதேனும் நடந்தால் அவர்கள் உடனே அது தொடர்பாக புகார் கொடுக்கலாம். எரிபொருள் வரிசையில் குழப்பங்களை ஏற்படுத்தும் பாதாளக்குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அநாவசியமாக தேவையற்ற இடங்களில் கூடுவதை தடுக்கவும். உங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் கூடுங்கள். அமைதியாக போராடும் போராட்டத்தில் குழப்பங்களை ஏற்றப்படுத்த வேண்டாம். நாடாளுமன்றத்துக்குள் இளைஞர்கள் வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

இன, மத பேதமின்றி நாம் செயல்பட வேண்டும். 1974ஆம் ஆண்டு அரசியலுக்கு நான் வந்ததில் இருந்து இதனை இல்லாதொழிக்கவே ஆசைபட்டன். ஒரே தாயின் பிள்ளைகளாக அனைவரும் வாழக்கூடிய ஒரு நாட்டை கட்டியெழுப்புவதே எனது ஆசையாகும்.

என்னுடைய கொள்கைகளில் இருந்து நான் ஒரு போதும் விலக மாட்டேன். இளைஞர்களின் ஆதரவோடு நாம் இணைந்து செயல்படுவோம். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

மற்றும் வடக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க வேண்டும். இதற்கான மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இலஞ்சத்தை சமூகத்திலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும். இது சம்பந்தப்பட்ட புதிய சட்டங்கள் போடப்படும். என்னுடைய பதவி காலத்திற்குள் இது போன்ற அனைத்து அரசியல் மாற்றங்களையும் நான் கொண்டு வருவேன் என கூறியுள்ளார். 

இலங்கை இக்கட்டான நிலையில் இருக்கும் போது இந்தியா வழங்கி உதவியையும் ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்துள்ளார். அத்துடன் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த இலங்கைக்கு உயர்மூச்சு வழங்கிய இந்தியாவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

இரண்டாம் இணைப்பு

இலங்கையின் 9ஆம் நாடாளுமன்றின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் 10.30க்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.

இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி தலைமையில் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படும்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

இலங்கையின் 9ம் நாடாளுமன்றின் மூன்றாம் அமர்வுகள் எவ்வித மரியாதை வேட்டுக்களும் இன்றி இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாக உள்ளது.

அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரை

ஜனாதிபதி ரணில், இன்றைய தினம் அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை ஆற்ற உள்ளார்.

புலம்பெயர் தமிழர்களிடம் ஜனாதிபதி ரணில் விசேட அறிவிப்பு (Video) | Today Parliament Session

வழமை போன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்படும் மரியாதை வேட்டுக்கள், வாகனத் தொடரணிகள் எதுவும் இம்முறை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எளிமையான நிகழ்வு

ஜனாதிபதியின் நாடாளுமன்ற வருகையின் போது மிக எளிமையான நிகழ்வு ஒன்று மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களிடம் ஜனாதிபதி ரணில் விசேட அறிவிப்பு (Video) | Today Parliament Session

ஜனாதிபதியை வரவேற்பதற்காக நாடாளுமன்றின் எதிரில் முப்படையினர் ஜனாதிபதி மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட உள்ளதுடன், ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய கொடி மட்டும் ஏற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

முதலாம் இணைப்பு - கமல்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US