அனோஜன் சிவராசாவின் மரணதண்டனை இரத்து: அநுரவுக்கு நன்றி தெரிவித்த மலையக மக்கள் சக்தி
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட சட்ட நிபுணர்கள் குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாக மலையக மக்கள் சக்தியின் தலைவர் இராமன் செந்தூரன் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை பகுதியில் இன்று (15.10.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சவூதி அரேபியாவில் தொழில் புரிந்து வந்த அனோஜன் சிவராசா இஸ்லாத்தின் இறைத்தூதர் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படும் நிலையில் பின்னர் அவர் மன்னிப்பும் கோரியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறந்த எடுத்துக்காட்டு
இந்நிலையில் அவருக்கு அந்நாட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அனோஜன் சிவராசாவை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்காக இலங்கையில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்து வந்தனர்.

இதற்கிடையில்இ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக சட்ட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டு அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக இராமன் செந்தூரன் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கது மட்டுமன்றி கடந்த கால அரசியல் தலைவர்களுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பால் - இறைச்சி தொடர்பான பெறுமதிசேர் முடிவுப் பொருள் உற்பத்தி: ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் வடக்கு ஆளுநர்
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam