ராஜபக்ச குடும்பத்தினருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டாலும் பரவாயில்லை! ஆனால்.. - அஜித் மன்னப்பெரும சாடல்

Colombo Rajapaksa Family Galagoda Aththe Gnanasara Thero Ajith Mannapperuma
By Rakesh Oct 15, 2026 06:09 AM GMT
Report

ராஜபக்ச குடும்பத்தினரோ அல்லது வேறு யாராக இருந்தாலும் குற்றங்கள் செய்திருந்தால் சட்டத்தின்படி அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டாலும் பரவாயில்லை, ஆனால் தற்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் முறையான விசாரணைகளின்றி அரசியல் பழிவாங்கும் நோக்கில் மட்டுமே அமைந்துள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று (14.10.2026) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசு சட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தித் தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றது. பெரிய அளவிலான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் மந்த நிலையில் உள்ள அதேவேளை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.

ஞானசார தேரர் மதத்துக்காகவும் நாட்டுக்காகவும் குரல் கொடுத்த போதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்றார். அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கிய நிலையில், தற்போது அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு அவரது துறவற ஆடை களையப்பட்டமையானது மதத்தின் மீதான பற்றையும் சமூக மதிப்பீடுகளையும் சிதைக்கும் செயலாகும்.

ராஜபக்ச குடும்பத்தினருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டாலும் பரவாயில்லை! ஆனால்.. - அஜித் மன்னப்பெரும சாடல் | Ajith Manapperuma Statement

ஒழுக்கமற்ற சமூகம்

அறிஞர்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய மரியாதை இதன் மூலம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு, ஒழுக்கமற்ற சமூகம் உருவாக்கப்படுகின்றது. பௌத்த மதத்தைப் பாதுகாப்பது அவசியமானதுடன், எதிர்காலத்தில் ஏனைய மதங்களுக்கும் இத்தகைய நிலை ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தவறிழைத்தவர்கள் எவராக இருப்பினும் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவதில் ஆட்சேபனை இல்லை. விசாரணைகளின்றி முன்னெடுக்கப்படும் பழிவாங்கல் நடவடிக்கைகளையே நாம் எதிர்க்கின்றோம் என்றார்.

ஞானசாரருக்கான பேரணியில் வைத்து தாக்கப்பட்ட நபர்.. அம்பலமான பிக்குவின் நாடகம்

ஞானசாரருக்கான பேரணியில் வைத்து தாக்கப்பட்ட நபர்.. அம்பலமான பிக்குவின் நாடகம்

இன்று ஷிரந்தி தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய ஆவணம்

இன்று ஷிரந்தி தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய ஆவணம்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US