தந்தையால் சொந்த மகளுக்கு நேர்ந்த கதி
தலவாக்கலையில் 13 வயதான தனது மகளை தகாத செயற்பாட்டுக்கு உட்படுத்திய 39 வயதான தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமி சில வாரங்களாக பாடசாலைக்கு வராத நிலையில், அது குறித்து ஆராயுமாறு பாடசாலையின் அதிபர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கமைய, தலவாக்கலை பொலிஸார் சிறுமி, தந்தை மற்றும் தாயாரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர்.
தந்தையின் தகாத செயற்பாடு
அங்கு சிறுமி பாடசாலைக்கு செல்லாததற்கான காரணத்தை கேட்டு விசாரணை நடத்தியுள்ளனர். இதன்போது, தந்தையின் தகாத செயற்பாடு குறித்து பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து அவர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலவாக்கலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நலின் திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri