சஜித்தின் நகைச்சுவையான தலைமை.. கடுமையாக விமர்சித்த சரத் பொன்சேகா
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திறமையான, நேர்மையான அரசியல் பண்புகளைக் கொண்ட பலமான எதிர்க்கட்சி ஒன்று நாட்டுக்கு அவசிய தேவை என்று முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் நாட்டின் எதிர்கால நோக்குப் பார்வை தொடர்பாக ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட பாரிய அரசியல் நெருக்கடிக்கு மக்கள் கடந்த தேர்தலில் ஓர் அழகான முடிவை வழங்கியுள்ளனர்.
நாட்டை அழித்து, தற்போதைய நிலைக்கு இழுத்துச் சென்ற பலமிக்க அரசியல் கட்சிகளையும், தங்களைப் பலசாலிகள் எனக் கருதிக் கொண்ட சுயநல அரசியல்வாதிகளையும் மக்கள் முழுமையாக நிராகரித்துள்ளனர்.
சுயநல அரசியல்வாதிகள்
மக்களால் நிராகரிக்கப்பட்ட பாரம்பரிய அரசியல் தலைவர்கள் மீது இனி மக்கள் நம்பிக்கை வைக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. எனினும் அவர்கள் அரசியலில் இருந்து விலகத் தயாராக இல்லை.

கைத்தடியைப் பிடித்தாவது அரசியலில் தொடரவே முயல்கின்றனர். உண்மையைச் சொல்வதானால் அவர்கள் காலாவதியானவர்கள், பட்டுப்போன மரங்களைப் போன்றவர்கள். எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் அவர்கள் மீண்டும் தளிர்க்கப் போவதில்லை. மறுபுறம், தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் இருப்பது ஒரு நகைச்சுவை எதிர்க்கட்சியாகும்.
மக்களை மீண்டும் ஏமாற்றி எப்படியாவது அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அவர்களிடம் உள்ளது. எனவேதான், நாட்டை நேசிக்கும் நேர்மையான எதிர்க்கட்சி ஒன்று நாட்டுக்குத் தேவையாக உள்ளது.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
இன்று நாட்டில் உருவாகியுள்ள மிகப் பெரிய ஊழல் வலையமைப்பு, கணவாய் போல தனது கரங்களை எல்லாத் திசைகளிலும், வெளிநாடுகள் வரை விரித்துள்ளது.

மத்திய வங்கிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல மோசடிகள் இப்போது வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன. 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல்போன சம்பவம் உள்ளிட்ட பல விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் இந்த ஊழல் வலையமைப்பின் பின்னணியில் நாட்டை வழிநடத்திய விதத்தின் விளைவுகளாகும். தற்போதைய அரசானது ஊழலுக்கு எதிராகச் செயற்பட்டு வருவதுடன், ஊழலில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்காகத் தங்களது அதிகபட்ச ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றது.
அரசின் இந்த நோக்கம் நல்லதாக அமைந்திருப்பதன் காரணமாகவே, எமது ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் தற்போதைய அரசுக்கு வழங்குகின்றோம்." என்றார்.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam