மர்ம நபர் ஒருவரால் கண்காணிக்கப்படும் சுரேஷ் சலேயின் பிள்ளைகள்! மனைவி முறைப்பாடு
மர்ம நபர் ஒருவரால் தானும் தன் குழந்தைகளும் கண்காணிக்கப்படுவதாக சுரேஷ் சலேவின் மனைவியான மனோரி சலே, குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணைக்குழுவிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையில் பணியாற்றும் ஒரு குறிப்பிட்ட நபர், சாதாரண உடையில் சந்தேகத்திற்குரிய கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தன்னையும் தனது இரண்டு குழந்தைகளையும் மீண்டும் மீண்டும் கண்காணித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
புலம்பெயர் அமைப்புகளிடம் அரசு பெற்ற நிதியை உடனடியாக வெளிப்படுத்துங்கள்! அர்ச்சுனா எம்.பிக்கு பத்தரமுல்ல சீலரத்ன தேரர் சவால்
முறைப்பாடு
அதன்படி, நேற்று தனது 17 வயது மகளும் 22 வயது மகனும் தங்கள் தந்தையைப் பார்க்க தேசிய மருத்துவமனைக்குச் சென்றபோது, அந்த நபர் குழந்தைகளைப் பின்தொடர்ந்து, தனது கைபேசியில் அவர்களைப் புகைப்படம் எடுத்ததாகவோ அல்லது காணொளி எடுத்ததாகவோ அந்த முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவர் இதற்கு முன்பும் தேசிய மருத்துவமனை மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை வளாகங்களுக்கு அருகில் சுற்றித் திரிவதைக் கண்டிருப்பதாகவும் மனோரி சலே குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில், குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணைக்குழு இந்த விவகாரம் குறித்து ஒரு சுதந்திரமான விசாரணையைத் தொடங்கவும், சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காணவும், யாருடைய அறிவுறுத்தலின் பேரில் இத்தகைய செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை கண்டறியவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மனோரி சலே கோரிக்கை விடுத்துள்ளார்.
புதன் - சனி சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம யோகம்: நாளை முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே மாறப்போகுது! Manithan
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan