ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீருடன் மாவீரர் துயிலும் இல்லத்தில் புதைக்கப்பட்டது சாந்தனின் வித்துடல்
சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சாந்தன் இந்தியாவின் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதும் தொடர்ந்து சிறப்புமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு தாயகம் திரும்ப இருந்த நிலையில் திடிரென உயிரிழந்திருந்தார்.
சாந்தனின் உயிரிழப்பு தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தழிப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
விபூதி தூவி அஞ்சலி
குறிப்பாக உயிரோடு வருவாரேன எதீர்பார்த்திருந்த நிலையில் உயிரிழந்த நிலையில் தாயகத்திற்கு கொண்டு வரப்பட்டு பல்வேறு இடங்களிலும் மக்கள் அலைகடலெனத் திரண்டு கண்ணீர் மல்க மக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில் உடுப்பிட்டியில் உள்ள அவரது சொந்த வீட்டில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று தலைவர் பிரபாகரனின் வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெருமளவிலான மக்கள் புடைசூழ நல்லடக்கத்திற்காக உடல் தூயிலும் இல்லத்திற்கு எடுத்து வரப்பட்ட போது வீதிகளில் திரண்டு மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.

குறிப்பாக சாந்தனின் வித்துடலுக்கு மண்ணுக்கு பதிலாக விபூதியை தூவியுள்ளனர்.
இறுதியாக எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உற்றார் உறவினர் நண்பர்கள் போராளிகள் எனப் பெருமளவிலானோரின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



தாயின் கையால் ஒரு பிடி சாப்பாட்டுக்கு ஏங்கிய சாந்தனுக்கு வாய்க்கரிசி இடும் போது துடிதுடித்த நிமிடங்கள்













ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri