குமார் சங்கக்காரவின் பெயரில் இடம்பெறும் மோசடி; அவசர எச்சரிக்கை
முன்னணி வணிக பண்டக்குறி நிறுவனங்களை விளம்பரம் செய்வது போன்ற போலி காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கையின் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
தாம் டராஸ் மற்றும் சம்சுங் DARAZ, Samsung போன்ற நிறுவனங்ளை ஆதரிப்பது போல் காட்டும் காணொளிகள், செயற்கை நுண்ணறிவு AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டவை என்றும், இது பொதுமக்களை ஏமாற்றும் முயற்சியெனவும் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.
தாம் டராஸ் மற்றும் சம்சுங் DARAZ/Samsung போன்ற எந்த நிறுவனத்துடனும் இணைந்திருக்கவில்லை.
என்னைப் போல காட்டப்படும் அனைத்து விளம்பரங்களும் AI தொழில்நுட்பத்தின் டீப் பேக் (Deep Fake) அடிப்படையில் உருவாக்கப்பட்ட போலிகள். தயவுசெய்து அவற்றை நம்ப வேண்டாம்," என அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசடி முயற்சிகள், AI தொழில்நுட்பத்தில் உருவாகும் deepfake வீடியோக்கள் மற்றும் படங்களை பயன்படுத்தி பிரபலங்களை போல காட்டி விளம்பரங்கள் அல்லது முதலீட்டு திட்டங்களை பொய்யாகப் பரப்புகின்றன.
இதன்மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை மோசடிக்குப் பயன்படுத்து சமூக ஊடகங்களில் பரவுகின்றன. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இணைய பாதுகாப்பு நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். அதற்கான சில முக்கிய ஆலோசனைகள்:
• விளம்பரங்கள் உண்மையானதா என்பதை அதிகாரப்பூர்வமான ப்ராண்ட் பக்கங்கள் அல்லது உறுதியான சமூக ஊடக கணக்குகள் மூலம் சரிபாருங்கள்.
• மிகவும் ஈர்க்கக்கூடிய அல்லது நம்பமுடியாத அளவிற்கு நல்ல சலுகைகள் என்றால் அதைப் பற்றிக் கவனமாக இருங்கள், குறிப்பாக பணம் தொடர்பான விவரங்கள் தேவைப்படும்போது.
• சந்தேகத்துக்கிடமான விளம்பரங்கள் அல்லது உள்ளடக்கங்களை உடனடியாக அதற்கான சமூக ஊடக நிறுவனங்களுக்கு முறைப்பாடு செய்யவும்
அரசியலியர்களோ, பிரபலங்களோ சார்ந்த போல் தோன்றும் எந்தவொரு விளம்பரத்தையும் நம்புவதற்கு முன் நன்கு சிந்திக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.
இந்தக் குற்றச் செயலில் DARAZ நிறுவனம் தொடர்பில்லையென்றும், அந்த விளம்பரங்களில் அவர்கள் பங்கு இல்லையென்றும் அந்த நிறுவனம் தங்கள் தரப்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உருவப்படமும் இதே போன்றதொரு விளம்பரத்தில் போலியாக பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.