யாழ்ப்பாணத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் மடக்கிப் பிடிப்பு
யாழில், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனம் ஒன்று விசேட அதிரடிப்படையினரால் நேற்றையதினம்(09) மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த வாகனத்தின் சாரதியும் பிடிக்கப்பட்டதுடன், அவர் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பருத்தித்துறையில் இருந்து மணல் கடத்தப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பரை விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்றனர்.
இதன்போது குறித்த டிப்பர் வாகனம் கொடிகாமம் ஊடாக மந்துவில் பகுதியால் தப்பிச் சென்று கொண்டிருந்தவேளை மண்ணை வீதியில் கொட்டி விட்டு, சாவகச்சேரி - கைதடி வீதியால் செல்லும்போது அவ்விடத்தில் வைத்து டிப்பருடன் சாரதி மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
அவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
