கடுமையான தேங்காய் பற்றாக்குறை! ஏற்றுமதி மூலம் பெரும் இலாபம் ஈட்ட திட்டமிடும் வியாபாரிகள்
நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பினால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ள நிலையில் இந்த ஆண்டும் தேங்காய் ஏற்றுமதி செய்து பெரும் இலாபம் ஈட்டுவதற்கு வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர் என்று மக்கள் போராட்டக் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.
தேங்காய் ஏற்றுமதி
மேலும், மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய தேங்காய் இல்லாவிட்டாலும், தேங்காய் ஏற்றுமதி மூலம் பெரும் இலாபத்தை ஈட்ட ஒரு தரப்பினர் செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
எனவே அரசாங்கம் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அத்துடன், தேங்காய் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தேங்காய் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
2019 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கிடையில் ஏற்பட்ட உர நெருக்கடி காரணமாக தென்னை செய்கையில் ஈடுபட்டவர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
அதனையடுத்து 2020 - 2021ஆம் ஆண்டுக்கிடையில் வெண்ணிற ஈ தாக்கத்தினால் தென்னை பயிர்ச்செய்யை மீண்டும் பாதிப்பை எதிர்நோக்கியது.
இது போன்ற பிரச்சினைகளே தென்னை விளைச்சல் வேகமாக குறைவதற்கு காரணமாக இருந்தன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
You May Like This