சம்பூர் சூரிய ஒளி மின்சாரம்: விரைவில் இந்திய இலங்கை ஒப்பந்தம்
இந்தியாவும் இலங்கையும் 50 மெகாவாட் திறன் கொண்ட சம்பூர் சூரிய மின்சார உற்பத்தி நிலையத்திற்கான ஒரு அலகுக்கான விலையில் இணக்கம் கண்டுள்ளன.
இதன்படி, ஒரு அலகுக்கு 0.068 டொலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து, இந்தியாவின் என்டிபிசி லிமிடெட் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றுக்கு இடையேயான மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் விரைவில் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலக்கரி மின்சார நிலைய திட்டம்
சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கான அலகு விலையை இரண்டு நாடுகளின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடந்த வாரம் ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சர்ச்சைக்குரிய நிலக்கரி மின்சார நிலைய திட்டம் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த சூரிய ஒளி மின்சார நிலையம் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
