மட்டக்களப்பிலுள்ள ஹோட்டலில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர்
மட்டக்களப்பு நகரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த முறக்கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரதான வியாபாரி உட்பட 3 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 7 ஆயிரம் மில்லிகிராம் ஜஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து அம்மன் கோவில் வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றை முற்றுகையிடப்பட்டுள்ளது.
முற்றுகை நடவடிக்கை
இதன்போது ஹோட்டல் அறையில் தங்கியிருந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரதான வியாபாரியான முறக்கொட்டாஞ்சேனை காளி கோவில் வீதியைச் சேர்ந்த நபரை 3200 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.

மேலும், அவருடன் இருந்த இன்னொரு வியாபாரியை 1300 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சித்தாண்டி பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு அருகில் சித்தாண்டி 2ம் பிரிவைச் சேர்ந்த போதை வியாபாரி ஒருவரை 2500 மில்லிகிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 3 பேரையும் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri