இந்திய - பாகிஸ்தான் போட்டி : மைதானம் மாறி சென்றாரா ஜனாதிபதி!
கொழும்பிலுள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (15.02.2026) நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் உலக கிண்ணப் போட்டியை கண்டுகளிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மைதானம் மாறி போய்விட்டார் என சமூக வலைத்தளங்களில் எதிர்த் தரப்பினர் பேசு பொருளாக்கியுள்ளனர்.
தர்க்க ரீதியிலான காரணங்களை முன்வைத்து பேச தெரியாத எதிர்க்கட்சியினர் ஏதோ ஒன்று கிடைத்து விட்டால் அதை வைத்து அரசாங்கத்தை தாக்கி வருகின்றனர்.
ஆனால் மேற்குறிப்பிடும் காரணங்களில் உண்மை இருக்கிறது. ஜனாதிபதி நேற்று இந்திய - பாகிஸ்தான் போட்டியை கண்டுகளிக்க சென்ற செய்தி அவரின் மூகநூல் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பெயர் மாற்றப்பட்ட மைதானம்
'இன்று (15) இரவு கெத்தாராம மைதானத்தில் நடைபெற்ற வரலாற்று முக்கியமான இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளித்தேன்.
இந்த நிகழ்வில் பாகிஸ்தானின் உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைச்சர் Syed Mohsin Raza Naqvi மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santosh Jha) என்னுடன் இணைந்து கொண்டனர்.'
1990 ஆம் ஆண்டு கெத்தாராம என்ற பெயர் ஆர்.பிரேமதாச மைதானம் என மாற்றப்பட்டது. அதன் பின்னர் உத்தியோகப்பூர்வமாக ஆர்.பிரேமதாச மைதானம் என்றே குறிப்பிடப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஜனாதிபதியின் சமூக வலைத்தளங்களை ஜனாதிபதி கையாள்வதில்லை. அதற்காக நியமிக்கப்பட்டவர்களே செய்திகளை வெளியிடுன்றனர். பொறுப்பான அதிகாரிகள் இவ்வாறான விடயங்களில் கவனம் கொள்ள வேண்டும். ஏனென்றால் நாட்டின் ஜனாதிபதி என்பதால் அவருக்கே தாக்குதல் தொடுக்கப்படும்.
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam