பொலிஸ் திணைக்களத்தின் உயர் பதவிகளில் மாற்றம்
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உயர் பதவிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியாவின் பரிந்துரையின் பேரில், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் ஆறு சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒழுக்காற்று நடவடிக்கையின் அடிப்படையில் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க பொலிஸ் நிர்வாகப் பிரிவு பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, மத்திய மாகாணத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தின் புதிய நிர்வாக பிரிவு பொறுப்பாளராக சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக சஞ்சீவ தர்மரத்ன கடமையாற்றியிருந்தார்.
பயிற்சி மற்றும் மேம்பட்ட பயிற்சி பிரிவிற்கு பொறுப்பாக கடமையாற்றி வந்த சஜீவ மெதவத்த தற்போது மேல் மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக கடமையாற்றி வந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் திஸ்ஸ தனபால, வட மத்திய மாகாணத்துக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்.
வட மத்திய மாகாணத்திற்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் புத்திக சிரிவர்த்தன தற்போது வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் பயிற்சி மற்றும் மேம்பட்ட பயிற்சி பிரிவின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சம்பத் குமார லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றம், போக்குவரத்து, குழந்தைகள் மற்றும் பெண்கள் பிரிவுகளுக்கான பொறுப்பு சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவுகளுக்கான பொறுப்பினை வகித்து வந்த நிலையில், சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரப் பொறுப்பும் ரன்மல் கொடிதுவக்குவிற்கு வழங்கப்பட்டுள்ளது.