தீவகத்தின் கல்வித்தரத்தை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
தீவக பிரதேச கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கும் அப்பகுதியின் கல்வி தரத்தை மேம்படுத்துவது தொடர்பிலும் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
யாழ் மாவட்டத்தின் தீவக கல்வி வலய பாடசாலைகளில் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் ஆளணி பற்றாக்குறை நிர்வாக பிரச்சினைகள் காணப்படுவதாகவும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதில் இவ்வாறான காரணிகள் பல தாக்கங்களை ஏற்படுத்துவதாகவும் பலதரப்பட்டவர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.
கல்வித்தர நிலை
இந்நிலையிலேயே குறித்த கலந்துரையாடல் இன்று காலை (28.07.2024) அமைச்சரின் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது தீவக பிரதேசத்தில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான ஏதுநிலைகள் குறித்து இருதரப்பினரும் இதன்போது விரிவாக ஆராய்ந்தனர்.
தீவக கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வித்தர நிலையை மேம்படுத்தி மாணவர்களுக்கு சிறந்ததோர் கல்விச் சேவையை பெற்றுக்கொடுக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
கல்வி நிலை அதிகாரிகாரிகள்
குறிப்பாக தீவக கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் தற்போது கல்வி நிலை வீழ்ச்சி அடைந்துள்ளதை புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்நிலையில் அது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் விசேடமாக ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் கல்வி நிலைகளை மேம்படுத்தும் நோக்கில் துறைசார் கல்வி நிலை அதிகாரிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் எடுத்துக் கூறியிருந்தார்.
அத்துடன் கல்வித்துறையில் இருக்கக்கூடிய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான எதுநிலைகள் குறித்து துறைசார் அமைச்சின் கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வுகளை காண்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
