சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு நிரந்தர மின் பிறப்பாக்கி..!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதிக்கான நிரந்தர மின்பிறப்பாக்கி நேற்று (27) வைத்தியசாலையை வந்தடைந்தது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவை செயற்படுத்துவதற்கான மின்பிறப்பாக்கி இல்லாததன் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் சத்திர சிகிச்சைக் கூடத்தை இயக்க முடியாத நிலைமை இருந்து வந்தது.
தற்காலிக மின்பிறப்பாக்கி
இந்நிலையில் 400 கிலோ வாட்ஸ் வலுவுடைய நிரந்தர மின்பிறப்பாக்கி வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
எதிர்வரும் வாரத்தில் இருந்து குறித்த மின்பிறப்பாக்கி பயன்பாட்டிற்கு வரும்
எனவும் அதுவரை தற்போதைய தற்காலிக மின்பிறப்பாக்கி பயன்பாட்டில் இருக்கும்
எனவும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ரஜீவ் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |