நள்ளிரவு வேளையில் திருமலையில் பதற்றம்! இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிப்பு
புதிய இணைப்பு
திருகோணமலை கடற்கரையோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், வெளியிட்டுள்ள ஒரு குரல் பதிவில், அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு குறித்த சிலை அகற்றப்பட்டமைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
குறித்த குரல் பதிவில், "8 மணியளவிலே அடாவடியாக சிலை கொண்டு வந்து வைக்கப்பட்ட போது அமைச்சர் ஆனந்த விஜேபாலவிற்கு தொலைபேசி அழைப்பு எடுத்து பேசப்பட்டது.
இதன்போது 3 மணித்தியாலங்களுக்குள் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த சிலை அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
Update at 23:15 the statue has been removed and hopefully the illegal construction will also be removed. I would like to thank the Minister Ananda Wijepala for intervening in this matter and taking appropriate action https://t.co/8nlzsaKrxt pic.twitter.com/OQex4xoOHA
— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) November 16, 2025
இரண்டாம் இணைப்பு
திருகோணமலையில் தற்போது வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை பொலிஸாரால் உடனடியாக அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, குறித்த இடத்தில் விசேட பாதுகாப்பு அணியினர் கடமையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்காக நாளையதினம்(17) காலை திருகோணமலை மாநகரசபை உறுப்பினர்களை நகரசபையில் ஒன்று கூடுமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்து சட்டத்தரணிகளுடன் கலந்துரையாட குகதாசன் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
திருகோணமலையில் கடற்கரையோரமாக சட்டவிரோதமாக புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதால் அந்த இடத்திலே பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.
குறித்த பகுதியில் கட்டிடம் அமைக்க நீதிமன்றம் தடை இல்லை எனவும் அத்தோடு கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கருதி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்தோடு, குறித்த பகுதியில் முன்னைய காலத்தில் பௌத்தர்களுக்கான அறநெறி பாடசாலை காணப்பட்டதாகவும் பின்னர் சுனாமி ஏற்பட்ட பின்னர் அது அழிந்து போய் விட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையிலே குறித்த இடம் பௌத்தர்களுக்கே சொந்தம் என தெரிவிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருகோணமலை மற்றும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் புத்த விகாரை அமைப்பதற்கு அரசாங்கம் மறைமுகமாக அனுமதி வழங்கி இருக்கின்றதா என்கின்ற சந்தேகம் எழுகின்றது.
இந்தநிலையிலே, குறித்த விவகாரம் குறித்து அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துமா அல்லது கடந்து செல்லப் போகின்றதா. மேலும், அந்த இடத்திலே பௌத்த விகாரை அமைக்கின்ற பல காணொளிகள் தற்போது வெளியாகி உள்ளன.
அத்தோடு,ஏன் திருகோணமலையை இவ்வளவு விரைவாக இலக்கு வைக்கிறீர்கள் என எல்லோரும் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும், இது தொடர்பான பல விடயங்களை விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
எதையும் தொடங்கல, எல்லாத்தையும் முடிச்சாச்சு, குணசேகரன் கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam