பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்படும் : சஜித் (Photos)

Sri Lanka People Sajith Premadasa Up Country
By Thirumal Jan 16, 2022 01:41 PM GMT
Report

தனது ஆட்சியில் பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்படும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் இன்று (16) நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் தைப்பொங்கல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் ஆரம்ப நிகழ்வாக சூரியனுக்கு நன்றி செலுத்துவதற்காக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சூரியப்பொங்கல் பொங்கி விழாவை ஆரம்பித்து வைத்துள்ளார்.

அதனை தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

'நல்லிணக்கம், சகவாழ்வு மற்றும் நன்றியறிதலின் முக்கியதுவத்தை எடுத்தியம்பும் பொங்கல் நாளில் தொடர்ந்தும் உங்கள் மதவுரிமையை பாதுகாப்பேன் என உறுதியளிக்கின்றேன்.

அவரவர் அடையாளத்தை பாதுகாப்பதும், ஏனைய மதத்தினரை மதிப்பதும் உயரிய மனித குணமாகும். அவ்வாறான குணவியல்பை பாதுகாப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம். எனது தந்தை பெருந்தோட்ட மக்களுக்கும் பிரஜா உரிமையை வழங்கி அவர்களின் வாழ்வுரிமையை பாதுகாத்தார். அவரே பிரஜா உரிமை என்ற முதலாவது போராட்டத்தை தொடங்கி வெற்றிப் பெற்றார்.

பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்படும் : சஜித்  (Photos) | Sajith Premadasa Development Of Plantation

அதேபோல் பெருந்தோட்ட மக்களை காணி உரிமையாளர்களாக மாற்றும் இரண்டாவது போராட்டத்திலும் பிரேமதாசவின் மகன் வெற்றி பெற்று தருவார். சிலர் இன,மத, குல பேதங்களை பயன்படுத்தி என்னை சாடினர். அதை கண்டு நான் அச்சமடைய போவதில்லை.

எனது ஆட்சியில் இன,மத,குல மற்றும் அடிப்படைவாதம் போன்ற பேதங்கள் இன்றி அனைவருக்கும் பொதுவானதொரு ஆட்சி நடக்கும். இன்று சில மதவாதிகளுக்கும், இனவாதிகளுக்கும் மக்களின் துயரம் தெரிவதில்லை. ஆட்சியாளர்களுக்கும் இது தெரிவதில்லை. காரணம் அவர்கள் கையில் எரிவாயு வெடிப்பதில்லை, அவர்கள் எரிவாயு கொள்வனவு வரிசையில் நிற்பதில்லை. அவர்கள் பசளையின்றி கஷ்டப்படவில்லை. அவர்கள் அரசி, சீனி, எண்ணெய் வரிசைகளில் எப்போதும் நிற்பதில்லை. அவர்களுக்கு ஒரு போதும் பால்மா பிரச்சினையில்லை அல்லவா?

காரணம் அவர்களுக்கு அவை எல்லால் அரண்மனைக்கு கொண்டுவந்து கொடுக்கப்படுகின்றது.

தயவுச் செய்து விழித்துக் கொள்ளுங்கள். மதவாதம், பிரிவினை வாதத்திற்கு மீண்டும் ஏமாற வேண்டாம். ஆகவே எமது தாய்நாட்டை கட்டி எழுப்ப அனைவரும் கைகோர்த்து செயற்படுவது அவசியம்.

இயற்கை குளிர் காற்றை வழங்கினாலும் மக்களின் வயிற்றில் நெருப்பு எரிகின்றது. இன்று தரித்திரம் தலை தூக்கியுள்ளது. இன்று இந்தியா மலையக மக்களுக்கு வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்குகின்றது. இதற்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஆகவே பெருந்தோட்ட மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கின்றேன். வேறு யாருக்கும் இது முடியாது எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் வரவேற்புரையை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் உரையாற்றியதோடு, இலங்கைக்கான இந்தியத்தூதுவர் கோபால் பாக்லே, கண்டிக்கான இந்திய உதவி தூதுவர் ஆதிரா, இராதாகிருஷ்ணன், வேலுகுமார், வடிவேல் சுரேஷ்,தமிழ் முற்போக்கு கூட்டணியின் செயலாளர் சந்திர சாப்டர் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சரஸ்வரதி சிவகுரு, முத்தையாராம் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.           

     

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US