ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள்! அரசுக்குச் சஜித் எச்சரிக்கை

Sajith Premadasa Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Rakesh Jun 10, 2026 10:52 AM GMT
Report

வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்கித் தருவோம் எனப் போலி வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு இன்று விவசாயிகள், அரச ஊழியர்கள் மற்றும் பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவர்கள் உட்பட இந்நாட்டின் 220 இலட்சம் மக்களையும் அனாதையாக்கி நிராதரவாக்கியுள்ளது.

அத்துடன், அரசின் இந்த ஒடுக்குமுறைச் சூழலைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடும் நாள் வெகுதொலைவில் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(09.06.2026) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்து பிக்குகளின் ஆன்மீகப் பயணம் இன்று ஆரம்பம்

தாய்லாந்து பிக்குகளின் ஆன்மீகப் பயணம் இன்று ஆரம்பம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் காலத்தில் விவசாய மக்களிடம் வாக்குக் கேட்டுப் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசிய அரசு, இன்று அவர்களைக் கைவிட்டுள்ளது. தற்போது விவசாயிகளுக்குத் தேவையான தரமான விதைகள், உரம், யூரியா, களைக்கொல்லிகள் மற்றும் ஏனைய உபகரணங்களின் விலைகள் பன்மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றன.

அவதிக்குள்ளாகும் விவசாயிகள்

கிடைக்கும் உரமும் தரம் குறைந்ததாகவும், அளவு குறைவாகவும் உள்ளது. தமது நகை நட்டுக்கள் மற்றும் சொத்துக்களை அடமானம் வைத்து விவசாயம் செய்த விவசாயிகள் இன்று நடுத்தெருவில் நிற்கின்றனர்.

ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள்! அரசுக்குச் சஜித் எச்சரிக்கை | Sajith Criticizes Anura Government

நெல் கிலோவுக்கு 150 ரூபா உத்தரவாத விலையைச் சட்டமாக்கித் தருவோம் எனக் கூறிவிட்டு, இன்று வரை அதனைப் பெற்றுக்கொடுக்காமல் விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளனர்.

இதுமட்டுமன்றி, மனித - யானை மோதல்களினால் ஏற்படும் பயிர்ச் சேதங்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கு இன்றுவரை நிரந்தரத் தீர்வுகள் எட்டப்படவில்லை.

இதேவேளை, அநுர அரசு அரச ஊழியர்களையும் திட்டமிட்டு ஏமாற்றியுள்ளது. நாட்டின் நிர்வாகக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் முக்கிய பிரிவான பிரதேச செயலாளர்களுக்கு உரிய எரிபொருள் கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய வசதிகள் எவையும் அரசால் வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக, தங்களின் சொந்தச் செலவில் எரிபொருள் அடித்துக் கடமையாற்ற முடியாது என அவர்கள் அறிவித்துள்ளனர். திங்கட்கிழமைகளில் வேறு கூட்டங்களில் பங்கேற்கப் போவதில்லை எனவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர். கிராம உத்தியோகத்தர்கள் தொடக்கம் சகல அரச சேவை ஊழியர்களும் தற்பொழுது கடுமையான மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளனர்.

அரச ஊழியர்களை ஓரங்கட்டிய அரசாங்கம்

விவசாயிகளையும் அரச ஊழியர்களையும் ஓரங்கட்டிய இந்த அரசு, பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத் துறையையும் தற்போது முழுமையாகச் சீரழித்துள்ளது. பாரம்பரிய சர்வாங்க மற்றும் நிபுணத்துவ வைத்தியர்களுக்கான எழுத்து மற்றும் பிரயோக பரீட்சைகளை அரசு இடைநிறுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த மக்களும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள்! அரசுக்குச் சஜித் எச்சரிக்கை | Sajith Criticizes Anura Government

அத்துடன், 700 இற்கும் அதிகமான பாரம்பரிய சர்வாங்க மருத்துவர்களின் உத்தியோகபூர்வப் பதிவுகளும் தன்னிச்சையாகத் தடை செய்யப்பட்டுள்ளன அரசின் பலவீனமான மற்றும் முறையற்ற கொள்கைகள் காரணமாகவே ஒட்டுமொத்த பொதுமக்களும் இன்று சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

எனவே, திறைசேரியில் காணப்படும் நிதியைப் பயன்படுத்தி மக்களுக்குத் தேவையான அவசர நிவாரணங்களை உடனடியாக வழங்கி, அவர்களின் வாழும் உரிமையை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

மக்கள் நலனை விரும்பும் ஒரு பொறுப்புமிக்க எதிர்க்கட்சியாக, மக்களின் உரிமைகள் வென்றெடுக்கப்படும் வரை நாங்கள் நாடாளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் எப்போதும் விழிப்போடு நின்று போராடுவோம் என்றார். 

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தொடரும் கைதுகள்.. அவசர அவசரமாக மனுத்தாக்கல் செய்த பிரதி பொலிஸ்மா அதிபர்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தொடரும் கைதுகள்.. அவசர அவசரமாக மனுத்தாக்கல் செய்த பிரதி பொலிஸ்மா அதிபர்

சுரேஷ் சலேக்கு எதிரான சாட்சியங்கள் உறுதி - நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

சுரேஷ் சலேக்கு எதிரான சாட்சியங்கள் உறுதி - நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

YOU MAY LIKE THIS VIDEO


மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US