தாய்லாந்து பிக்குகளின் ஆன்மீகப் பயணம் இன்று ஆரம்பம்
தாய்லாந்தில் இருந்து வருகை தந்த பௌத்த பிக்குகளின் பாதை யாத்திரை பயணம் திருகோணமலை நகரில் இருந்து இன்று(10.06.2026) ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, திருகோணமலை - கண்டி பிரதான வீதி ஊடாக வருகை தந்த பிக்குகள் கொண்ட குழுவினரை திருகோணமலை மாவட்ட செயலகம் சார்பில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யு.ஜீ.எம்.ஹேமந்த குமார தலைமையிலான குழுவினர் வரவேற்று ஆசிபெற்றுக் கொண்டனர்.
பாதை யாத்திரை ஆரம்பம்
குறித்த பாதை யாத்திரையானது, திருகோணமலை, கந்தளாய், ஹபரணை, அனுராதபுரம், குருநாகல், மாத்தளை உட்பட கண்டி வரை பயணிக்கவுள்ளனர்.
10 நாட்கள் நடைப் பயணம் கொண்ட பாதை யாத்திரையானது 20 நாட்கள் தங்கியிருக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து தர்ம அன்பர்களும் பக்தியுடன் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பாதை யாத்திரியையின் போது பாதுகாப்பு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan