சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரவுடன் சிறீதரன் எம்.பி உரையாடல்
சொல்லிசைக் கலைஞரான சங்கீத்சனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் தொலைபேசி வழி உரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அநுரவுக்கு சிறீதரனால் அனுப்பிய கடிதத்தின் பிரகாரம் இந்த தொலைபேசி உரையாடல் இடம்பெ்றறுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் உரையாடல்
இந்நிலையில், குறித்த உரையாடலுக்கு அமைவாக, சங்கீத்சனுக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்படாமையின் காரணமாக சாதாரண நீதிமன்ற முறைமையின் கீழ் அவருக்கான பிணைக்கோரிக்கையை சட்டத்தரணிகள் ஊடாக விடுக்க முடியும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சிறிதரன் எம்.பியிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, அமைச்சர் சந்திரசேகரருக்கும், சிறீதரன் எம்.பிக்கும் இடையில் நாடாளுமன்ற வளாகத்தில் உரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
அந்த உரையாடலின்போதும், ஜனாதிபதி அநுரவின் அறிவிப்பு தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் வெளிப்படுத்தியதோடு சங்கீத்சனின் தாயாருடனும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 12 மணி நேரம் முன்
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri