கொழும்புத் துறைமுக பகுதியில் கடலில் விழுந்த மாலுமி
கொழும்புத் துறைமுக பகுதியில் கப்பல் மாலுமி ஒருவர் கடலில் விழுந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (17.09.2026) இடம்பெற்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கொழும்புத் துறைமுகத்திற்கு வர்த்தகக் கப்பல் ஒன்றை அழைத்து வருவதற்காக அதில் ஏற முற்பட்ட கப்பல் மாலுமி ஒருவரே இவ்வாறு கடலில் விழுந்து விபத்துக்குள்ளானார்.
பாதுகாப்பாக மீட்கப்பட்ட மாலுமி
கொழும்புத் துறைமுகக் கட்டுப்பாட்டு அறையினால் வழங்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக, உடனடியாகச் செயற்பட்ட கடற்படையினர், கொழும்புத் துறைமுக நுழைவாயிலுக்கு அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த P-163 கரையோர ரோந்துப் படகினைச் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அதற்கமைய, குறித்த படகின் மூலம் கடலில் விழுந்த மாலுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, துறைமுக செயல்பாட்டுக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு அழைத்து வரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்குளியில் மூன்று பேர் பலியான கோர விபத்து! கடும் கோபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் - சாரதியின் பரபரப்பு வாக்குமூலம்