சாகல ரத்நாயக்க சீ.ஐ.டி.யில் முன்னிலை
முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய சகாவுமான சாகல ரத்நாயக்க குற்ற புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலமொன்றை அளிக்கும் நோக்கில் அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றுள்ளார்.
காரணம்..
என்ன காரணத்திற்காக இவ்வாறு குற்ற புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையானார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
கடந்த அரசாங்க ஆட்சி காலத்தில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் பின்னணியில் சாகல குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
சாகல ரத்நாயக்க, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு மிகவும் விசுவாசமானவர் என்பதுடன் பொதுப் பாதுகாப்பு அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




