புலம்பெயர்ந்தோரின் கோரிக்கைக்கமைய இலக்கு வைக்கப்படும் மகிந்த! பதறும் மொட்டுக் கட்சி
"தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த புலம்பெயர்ந்தோரின் வேண்டுகோளுக்கமையவே தற்போதைய அரசால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலக்கு வைக்கப்பட்டுள்ளார் இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய வரப்பிரசாதங்களை இரத்துச் செய்வதற்குரிய சட்டமூலத்தை முன்வைப்பதற்கு அரசு தயாராகி வருகின்றது.
அரசியல் பழிவாங்கல்
இதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதிப் பதவியை வகிப்பவர்தான் நாட்டின் தலைவர். நாட்டுக்காகப் பல முடிவுகளை அவர் எடுக்க நேரிடும். தமது எதிர்காலம் குறித்து கருதாது நாட்டுக்காகவே முடிவுகளை எடுக்க நேரிடும்.

இவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளால் எதிர்காலத்தில் அவருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும். எனவேதான் உலக நாடுகளில்கூட தமது நாட்டின் முன்னாள் தலைவர்களுக்குத் தேவையான வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
எனினும், அரசியல் பழிவாங்கல் மற்றும் குரோத நோக்கு என்பவற்றின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய வரப்பிரசாதங்களை இல்லாது செய்வதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
புலம்பெயர்ந்தோரின் தேவை
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்த புலம்பெயர்ந்தோரின் தேவைக்காக, அவர்களின் பழிவாங்கல் நடவடிக்கைக்காக இந்த நாட்டில் போரை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்காலத்தில் போர் நிலை ஏற்பட்டால்கூட முதுகெலும்புடன் செயற்படக்கூடிய அரசதலைவர் ஒருவர் உருவாகுவதைத் தடுக்கும் நோக்கமும் இதன் பின்னணியில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam