வெள்ளாங்குளம் சந்தி பகுதியில் உழவு இயந்திரமொன்று தடம்புரண்டதில் பன்னிரெண்டு பேர் படுகாயம்
மன்னார் - இலுப்பைக்கடவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெள்ளங்குளம் சந்தி பகுதியில் உழவு இயந்திரமொன்று தடம்புரண்டதில் பன்னிரெண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மன்னார் இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்பை கடவையில் இருந்து ஏ 32 வீதி வழியாக வெள்ளாங்குளம் நோக்கி பயணித்த உழவு இந்திரம் ஒன்று துணுக்காய் நோக்கி திருப்ப முற்பட்ட சமயம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
வைத்தியசாலையில் அனுமதி
இதில் உழவு இயந்திரத்தின் இழுவைப் பெட்டியில் இருந்த பன்ணிரெண்டு பேர் படுகாயமடைந்த நிலையில் முழங்காவில் ஆதரவைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விபத்து தொடர்பான விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
படுகாயமடைந்த ஐந்து பேர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையிலும் ஏழு பேர் முழங்காவில் ஆதார வைத்திய சாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த உழவு இயந்திரத்தில் 15 பேர் வரையில் மரண வீடு ஒன்றுக்கு சென்று வெள்ளங்குளம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது இந்த அனத்தம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam