யாழில் இருவர் கைது: பொலிஸார் தீவிர விசாரணை
வேலணை - புங்குடுதீவு வல்லன் பகுதில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று(06.02.2026) இடம்பெற்றுள்ளது.
ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
புங்குடுதீவு பகுதியில் அண்மைக்காலமாக வன்முறை கும்பலை சேர்ந்தவரின் அச்சுறுத்தல் அதிகரித்து மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக பல தரப்பட்டவர்களாலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில், குறித்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இரு வாள்கள் மற்றும் ஒரு அபாயகரமான கோடாலி உட்பட சில பொருட்களும் கைதானவர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மேலதிக விசாரணைகள் ஊர்காவற்றுறை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri