இலங்கை தேர்தல் தொடர்பான அறிக்கையை வெளியிடவில்லை : ஐ.நா மறுப்பு
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டு, இணையத்தில் பகிரப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கை, ஐக்கிய நாடுகளின் எந்தவொரு அமைப்பினாலும் தயாரிக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை மறுப்பு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் அலுவலகம்
இந்த அறிக்கையில் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கை அலுவலகம், இதற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் தொடர்புகள் இல்லையென்று குறிப்பிட்டுள்ளது.
இது ஒரு புனையப்பட்ட ஆவணம் என்றும் இந்த ஆவணத்துக்கும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் மற்றும் இலங்கையில் ஐக்கிய நாடுகளின் பணிகள் என்பவற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
