ரஷ்யா - உக்ரைன் போர் அமெரிக்காவின் ராஜதந்திரம் (Video)
உலக வரலாற்றில் போரை மிகவும் விரும்புகின்ற ஒரு நாடு தான் அமெரிக்கா என்று அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வரலாற்றை பொருத்தவரை போர் என்பது ஒரு தொடர் கதை. அந்த நாடு உருவாகும் முன்பு அங்கிருந்த செவ்விந்தியர்களை அழித்ததில் துவங்கிய அந்த போர் நிலத்துக்காக, அடிமைகளுக்காக, வர்த்தக உரிமைகளுக்காக, துறைமுக பகுதிகளுக்காக, இயற்கை வளங்களுக்காக என்று இன்று வரை தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றது.
அமெரிக்க வரலாற்று நூல் எதையாவது எடுத்து படித்து பாருங்கள் அந்த நாடு ஒரு மோதலில் பங்கேற்காத நீண்ட காலம் ஒன்றை உங்களால் காண முடியாது.
போர்களின் மீதான அமெரிக்காவின் இந்த இச்சைக்கு வரலாற்று ரீதியான, வர்த்தக ரீதியான, புவிசார் அரசியல் ரீதியான பல பின்புலங்கள் இருக்கின்றன.
அவற்றின் அடிப்படைகள் தான் அமெரிக்கா தனது சுதத்திரத்தை பெற்றது. தனது நலன்களை பெற்றது. உலக நாடுகள் மத்தியில் செல்வாக்கை பெற்றது. உலகின் முதல்தர வல்லரசு என்ற ஸ்தானத்தை பெற்றது. அந்த ஸ்தானத்தை இன்று வரை தங்கவைத்து கொண்டிருக்கின்றது.
கடந்த பல தசாப்தங்களாக தனது மேலாதிக்கத்தை நிறுவி அதனை தங்க வைத்து கொள்வதற்கு முடிவில்லா பிரயத்தனத்தில் உலகம் பூராகவும் போர்களை தொடங்கியிருக்கின்றது அல்லது ஈடுபட்டிருக்கிறது.
எனவே சமகாலத்தில் இடம்பெறும் ரஷ்யா உக்ரைன் போரில் அமெரிக்காவின் ராஜதந்திரம் எவ்வாறானதாக அமையப்போகிறது என்பது தொடர்பான முழுமையான வரலாற்று தகவல்களுடன் வருகிறது உண்மையின் தரிசனம்,