மருத்துவமனைகள் நோயாளிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தும் ரஷ்ய படைகள் - செய்திகளின் தொகுப்பு
உக்ரைனில் உள்ள மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்கள், நோயாளிகளைக் குறி வைத்து ரஷ்ய படைகள் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி வருவதாக அசோசியேட் பிரஸ் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாகக் குறைந்தபட்சம் 34 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமைதி பேச்சுவார்த்தையைத் தொடர வேண்டும் என ரஷ்யாவிடம் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஷ்ய ஏவுகணைகளில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமானவை இலக்குகளைச் சரியாகத் தாக்காமல் செயலிழந்து போகிறது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,