ஐரோப்பாவை எச்சரிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை
ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் வகையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புத்தின் அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளார்.
ரஷ்யாவிடம் எரிவாயுவை கொள்வனவு செய்யும் நட்பு நாடுகள் அல்லாத நாடுகள் டொருக்கு பதிலாக ரஷ்ய நாணயமான ரூபிளை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஏனைய நாணய பரிமாற்றங்களிலிருந்து ரூபிளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வழிமுறைகளை கண்டறியுமாறு ரஷ்யாவின் மத்திய வங்கிக்கு புத்தின் பணிப்புரை வழங்கியுள்ளார்.
நாணய பரிமாற்றங்களில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், நடைமுறையிலுள்ள போன்று எரிவாயு தொடர்ந்தும் வழங்கவும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகள் ரஷ்ய சொத்துக்களை முடக்கியதன் மூலம் நம்பிக்கையை அழித்துள்ளதாகவும், உக்ரைனில் ரஷ்யாவின் நடவடிக்கைகள் தொடர்பாக மேற்கு நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு தடைகளை அமுல்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரம் நலிவடைந்துள்ளதுடன், ரூபிளின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.